Tuesday 26 May 2015

எலும்புகளை வலிமையாக்கும் சப்போட்டா


    தினமும், உணவுக்குப் பிறகு இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் எலும்புகள் வலும்பெறும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். சரும பளபளப்பு கூடும்.


  1. சப்போட்ட பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூலநோய் மற்றும் மலச்சிக்கலுக்கும் சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது. உடம்பு சூட்டை தனித்து, குளிர்ச்சி தருகிறது. 1௦௦ கிராம் சப்போட்டா பழத்தில் 28 மி.கிராம் கால்சியமும், 27 மி.கிராம் பாஷ்பரசும் இருக்கிறது.
  2. பித்தத்தால் ஏற்படும் வாந்தி, மயக்கத்தை சப்போட்டா போக்கும். சப்போட்டா பழத்துடன் ஒரு டீஸ்பூன் சீரகத்தை சேர்த்து சாப்பிட பித்தம் நீங்கும்.
  3. சப்போட்டா பழ ஜூஸுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் சளிதொல்லை நீங்கும்.
  4. சப்போட்டா, உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைத்துவிடும். சப்போட்டா பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், இரண்டு பழத்துடன், ஒரு டம்ளர் பால் சேர்த்து, மிக்சியில் அடித்து மில்க் ஷேக் செய்து சாப்பிடலாம்.
  5. 2 சப்போட்டா பழத்துடன், ஒன்றரை டீஸ்பூன் டீ தண்ணீரை கலந்து சாப்பிட்டால் வயிற்றுபோக்கின் போது ரத்தம் கலந்து வெளியேறுவது குணமாகும்.
  6. இரவெல்லாம் தூக்கம் இல்லாமல் தவிக்கிறவர்கள், சப்போட்டா ஜூசை குடித்துவிட்டு படுத்தால், அடுத்த நொடி தொக்கம் கண்களை தழுவும்.
  7. ஒரு சிட்டிகை பனைவெல்லம், சுக்கு, சித்தரத்தையுடன் சப்போட்டா பழ பேஸ்ட்டை கலந்து சாப்பிட்டால், த்டீர் ஜுரம் வந்த வேகத்தில் காணாமல் போய்விடும்.

No comments:

Post a Comment