Wednesday 27 May 2015

அன்னாச்சி பழத்தின் அற்புதங்கள்


நோய் எதிப்பு சக்தி நிறைந்தது அன்னாசிப்பழம். இது, அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்டும். ஞாபகசக்தியை அதிகரிப்பதிலும் அன்னாசிப்பழதுக்கு நிகர் அன்னாசிபழம் தான்.

  1. அன்னாசிப்பழச் சாறுடன் மிளகுத்தூள், தேன் கலந்து சாப்பிட்டால் இருமல், தொண்டை கரகரப்பு, சளித் தொல்லை சற்றென்று விலகிவிடும்.
  2. பசும்பாலுடன் அன்னாசிப்பழச் சாறை சம அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் ஆரம்பக்கட்ட அல்சர் நீங்கும்.
  3. அன்னாச்சிப் பழத்துடன் திராட்சைச் சாறு கலந்து குடித்து வந்தால் ரத்த சோகை குணமாகும்.
  4. ஒரு டம்ளர் அன்னாசிப்பழச் சாறுடன், கால் டம்ளர் அருகம்புல் சாறு கலந்து குடித்தால் மாதவிடாய்க் கோளாறுகள் முற்றிலும் நீங்கும். அன்னாசிப்பழச் சாறில் எழுமிச்சைச் சாறு கலந்து குடித்தால் அசதி, சோர்வு நீங்கி உடல் புத்துணர்வு பெரும். அன்னாசிப்பழச் சாறில் இஞ்சிச் சாறு கலந்து குடித்தால் பித்த வாந்தி நிற்கும்.
  5. அன்னாசிப்பழச் சாரில் இரண்டு சிட்டிகை சுக்குப் பொடி கலந்து குடித்தால் கை, கால் மூட்டு வலிகள் குணமடையும்.
  6. இரண்டு வெற்றிலையுடன் 1௦ துளசி இலையை சேர்த்து அரைத்து, அன்னாசிப்பழச் சாறுடன் கலந்து குடித்தால் எப்பேர்பட்ட தலைவலியும் நீங்கும்.
  7. நெல் பொறியை பொடித்து, அன்னாசிப்பழச் சாறுடன் கலந்து சாப்பிட்டால் பேதி நிற்கும்.
  8. அன்னாசிப்பழச் சாறில் சிறிது கசகசாவை அரைத்து கலந்து குடித்தால் தூக்கமின்மை தொலைந்து, நித்திரை கண்களைத் தழுவும்.

No comments:

Post a Comment