Saturday 30 May 2015

அழிவில் அண்டார்டிகா பனியடுக்கு


           புவி வெப்பநிலை உயர்வு காரணமாக அண்டார்டிகாவில் பணி அடுக்கு வேகமாகக் கரைந்து வருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, அண்டார்டிகா தீபகற்பத்தில் இருக்கும் மிகப் பெரிய ஐஸ் அடுக்கு ஓன்று 1998-ல் இருந்து 2012 வரையிலானகாலத்தில் நான்கு மீட்டர்கள் அடர்த்தியை இழந்திருப்பதாக பதிய ஆய்வு ஓன்று தெரிவிக்கிறது. லார்சன் சி என்ற இந்த அடுக்கு பற்றி பிரிட்டீஸ் அண்டார்டிக் சர்வே என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், இந்த அடர்த்தி இழப்பில் பெரும்பகுதி இந்த ஐஸ் அடுக்கின் அடியில் உள்ள வெதுவெதுப்பான கடலால் இழந்திருப்பதாகவும் தெரியவந்திருக்கிறது. 55000 சதுர கி.மீ பரப்பளவுள்ள இந்த அடுக்கு இன்னும் சில பத்தாண்டுகளில் இடிந்து விழுந்து, அதன் பின்னால் இருக்கும் பனி ஏரிகள் கடலுடன் வந்து இணைந்து கடல் மட்டத்தை உயர்த்தும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.லார்சன் சி அடுக்கிவிட மிகவும் சிறிய லார்சன் ஏ மற்றும் லார்சன் பி ஐஸ் அடுக்குகள் 1995 மற்றும் 2002-ம் ஆண்டுகளில் இடிந்து விழுந்தன.

No comments:

Post a Comment