Tuesday 26 May 2015

வாழ்நாளை கூட்டும் வாழைபழம்


          இயற்கை குளுக்கோஸ் என்று கொண்டாடப்படும் வாலைப் பலம், நமக்கு வைட்டமின்-A, E போன்றச் சத்துக்களைத் தருகிறது.

  1. இயல்பிலேயே சிலருக்கு உஷ்ண உடம்பாக இருக்கும். இவர்கள் தினமும் இரவு உணவுக்குப் பிறகு ஒரு பச்சை வாழைப்பழத்தை சாப்பிட்டு வர, உடல் குளிர்ச்சி பெரும். சூட்டினால் ஏற்படும் கட்டிகளும் நீங்கும். முட்டு வலி, வாதநோய் இருப்பவர்கள் பச்சஹை வாழைப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது.
  2. தனமும் பூவன் பலம் சாப்பிட்டு வந்தால், நல்ல ஜீரண சக்தி உண்டாகும். உடல்நிலை சரியில்லாமல் போய் மெள்ள மெள்ள மீண்டு வருபவர்கள் தினம் ஒரு பூவன்பழம் சாப்பிட்டால் உடல் சோர்வு, தளர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும்.
  3. மஞ்சள் காமாலை நோய் நீங்கிய பின்னும் கண்களில் தேங்கும் மஞ்சளை நீக்கும் வல்லமை படைத்தது ரஸ்தாளி பழம்.
  4. தினமும் ஒரு பேயன் வாழைப்பழத்துடன் சிறிது தேன் கலந்து சாப்பிட, அம்மைநோய் விட்டுச் சென்ற கொப்புளங்களில் வீரியம் குறையும். இதையே வெளிப்புற மருந்தாகவும் மாற்றலாம். ஒரு பேயன் வாழைப்பழத்துடன் சிறு கோத்து வெப்பந்தளிர், கொஞ்சம் இளரீர், கஸ்தூரிமஞ்சள் பவுடர். இவற்றை சேர்த்து அரைத்து அம்மைத் தழும்புகளில் மீது பற்றுப் போட்டு வந்தால், சுவடே இல்லாமல் வடுக்கள் மறையும்.
  5. செவ்வாழையில் வைட்டமின் A சத்து ஏராளமாக இருக்கிறது. இதை தொடர்ந்து 4௦ நாட்கள் சாப்பிட்டு வர, நோய் எதிர்ப்பு சக்தி கூடும். சொறி, சிரங்கு போன்றவற்றை குணப்படுத்தி சருமத்தை சீராக்கும். நரம்புத் தளர்ச்சியினால் ஏற்படும் தளர்வையும் நீக்குவதோடு, எலும்பை பலப்படுத்தி பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக்கசிவை தடுக்கும் வல்லமையும் செவ்வாழைக்கு உண்டு.
  6. நன்றாகப் பழுத்த அரை நேந்திரம் பலத்தை தினமும் இரவு சாப்பிட்டு வந்தால், இதயம் வலிமையாகும். மூச்சு சீராகும்.
  7. வயிறு நிறைந்திருக்கும் போது வாழைப்பழம் சாப்பிட்டால், தொண்டையிலேயே தங்கிவிடும். இதனால் சிலருக்கு சளி ஏற்படுகிறது. எனவே, வாழைப்பழம் சாப்பிட்டபின் ஒரு டம்பளர் சூடான தண்ணீர் பருகுங்கள். சளி ஏற்படாது.

No comments:

Post a Comment