Wednesday 17 June 2015

மறைந்து போன பாலிபுலி


மனிதன் தனது சுயநலத்துக்காக கொன்று குவித்த உயிரினங்கள் ஏராளம். பல அறிய உயிரினங்களை முற்றிலுமாக அழித்து விட்டான். அந்த வகையில் பாலி புலி  உயிரினமும் ஓன்று.

கடந்த 6௦ ஆண்டுகளில் மூன்று புலி இனங்கள் இந்த பூமியில் இருந்து முற்றிலுமாக மறந்து விட்டன.. அவற்றில் ஓன்று தான் பாலிபுலி. இந்த வகை புலிகள் இந்தோனேஷியாவில் உள்ள பாலி என்ற தீவில் மட்டுமே காணப்படுவதால் அந்த பெயர்.

புலி இனத்திலே கடைக்குட்டி என்று பாலிபுலியை உயிரியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இது பார்ப்பதற்கு மிகவும் குட்டியாக மற்ற புலிகளை விட அளவில் சிறியதாக இருப்பதால் இதை செல்லமாக பாலிபுலி என்று சொல்கிறார்கள். ஆண் பாலி புலியின் எடை சராசரியாக 910 கிலோ இருக்கும். பெண் புலி 658 கிலோ இருக்கும்.

மற்ற புலிகளில் இருந்து பாலி புலிகளை வேறுபடுத்திக் காட்டும் ஓர் அம்சம் அதன் உடலில் உள்ள கோடுகள். இந்த கோடுகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படும். கோடுகளுக்கு இடையில் கரும்புள்ளிகளும் இருக்கும்.

நமது நாட்டவர்களைப் போலவே பாலித்தீவு மக்களும் புலி நகம் கோர்த்த டாலர் புலிப்பல், புலியின் தோல் போன்றவற்றின் மீது எப்போதும் ஓர் ஆர்வம் உண்டு. பாலி புலியின் நகம் மற்றும் பல்லுக்கு அந்த சக்தி உண்டு என பாலி மக்கள் நம்பினர். மேலும் பாலி மக்கள் புலி நகத்தை அணிந்து கொள்வதை ஒரு கவுரவமாகவும் நினைத்தார்கள். பாலி மக்களின் இந்த மூடநம்பிக்கை தான் பாலி புலிகளுக்கு எமனாக அமைந்தது.

நகத்திற்காகவும், தோலுக்காவும், பல்லுக்காகவும் மனிதர்கள் தொடர்ந்து பாலி புலிகளை வேட்டையாடினர். இதில் சின்னஞ்சிறிய தீவில் இருந்த ஒட்டுமொத்த பாலி புலிகளும் அழிந்து விட்டன. இந்த பூமியின் கடைசி பாலி புலி 1937-ம் ஆண்டு கொல்லப்பட்டது.

No comments:

Post a Comment