Wednesday 3 June 2015

மருத்துவ குணமுள்ள ரோஜா பூ


      ரோஜா மலர் அழகானது, அன்பை வெளிப்படுத்த உதவுவது என்பதோடு, அனேக மருத்துவ குணங்களையும் கொண்டது. அவற்றில் சில...

  • ரோஜா மலர் லேசான துவர்ப்புச் சுவையுள்ளது. வயிற்றிலுள்ள வாயுக்களை அகற்றி குளிர்ச்சியைத் தரக்கூடியது. இதயத்துக்கு வலுவூட்டும். எத்தன இதழ்கள் குளிச்சியை உண்டாக்கும்.
  • ஜோச மலரின் இதழ்களை வேலைக்கு ஒரு கைப்பிடி வீதம் அப்படியே மென்று சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.
  • ரோஜா இதழ்களை தேவையான அளவு எடுத்துக் கொண்டு, சம அளவு பயத்தம் பயிரை அதனுடன் சேர்த்து 4,5 பூலாங்கிலங்கை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை தினமும் உடலில் தேய்த்து அரை மணி கழித்து குளித்து வந்தால் சரும நோயிகள் ஒழிந்து உடல் நல்ல நிறம் பெறும்.
  • ரோஜா இதழ்களை அயிந்து எடுத்து ஒரு கையளவு இதழை ஒரு பாத்திரத்த்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அதில் பாதி கசாயத்தை எடுத்துச் சர்க்கரை சேர்த்துக் காலையிலும், மறுபாதியை மாலையிலும் குடித்து வந்தால் மலச்சிக்கல் விழும்.

No comments:

Post a Comment