Tuesday 2 June 2015

சூரிய தரிசனம் விலக்கப்பட்ட நேரங்கள்


     காலைக் கதிரவனை தரிசிப்பதற்கும், வணங்குவதற்கும் பாரத கலாசாரத்தில் மிக முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. மாலை வேளையில் சூரியனைப்பார்ப்பதும் சூரிய ஒளியை ஏற்பதும் அழகை அதிகரிப்பதற்கு உதவும் என்று ஒரு மூதுரை உண்டு. ஆனால் சூரியனை பார்க்கக் கூடாத, விலக்கப்பட்ட நேரங்களைப் பற்றியும் ஆசாரியர்கள் போதித்துள்ளனர்.


              'சூரியனென்றோரு நட்சத்திரம் பூமிஎன்றேரு கோணம்' என்று பண்டைக் காலத்தவர் கூறியதுண்டு. இது பிரபஞ்ச கோடியின் சாஸ்திர அறிவியலின் தத்துவத்தின் அடிப்படையில் கூறுவது. விண்வெளியில் அளவிட முடியாத வண்ணம் உலாவும் சூரியனென்ற அற்புதத்தைப் பற்றி எத்தனையோ கதைகள் நாம் கேட்டிருப்போம். மிகப் பண்டைகாலம் முதல் மனிதன் ஆராதித்து வந்த ஓன்று தான் சூரியன். எதற்கு உதாரணமாக விளங்குகின்றது ஒரிசா மாநிலத்தில் கொனார்க்கில் சூரியன் கோவில்.


    பூமியிலிருந்து சுமார் பதினைந்து கோடி கிலோ மீட்டர் தூரத்தில் நிலைகொள்ளும் சூரியன் மிக மிக வெப்பமானது. மேல்ப் பரப்பில் 580 கெல்வின் மத்தியில் 15.6 கோடி கெல்வின் என்பது இதன் வெப்பம். சுமார் பதினான்கு லட்சம் கிலோ மீட்டர் குறுக்களவுடைய சூரியனில் ஒவ்வொரு வினாடியும் 7௦ கோடி டேன் ஹைட்ரஜன், 69.5 கோடி டேன் ஹீலியமாக மாறுகின்றது. நியுக்ளியார் ப்பிஷன்விளைவாகவே சூரியனின் சக்தி உருவாகுகின்றது. வினகிக்கு சுமார் 5௦ லட்சம் டேன் சக்தி 'காமா' கதிர்களாக வெளியேறுகின்றது. 45௦ கோடி வருடம் வயது கணக்கிடப்பட்ட சூரியனுக்கு இனியும் 5௦௦ கோடி வருடங்கள் இவ்வாறு அறிந்து நிற்க இயலும்.

          நீரில் பிரதி பலித்திருக்கும் போதும் நடுப்பகலிலும் சூரியனைப் பார்க்கக் கூடாதென்பது விசுவாசம். இதை விஞ்ஞானமுடன் பின் தாங்குகின்றது. தானாக ஜொலித்து நிற்கும் சூரியனை, வெறும் கண்கள்ளல் காண்பது தீங்கு விளைவிக்கும். நடுப்பகலில் வெறும் கண்களால் சூரியனைப் பார்த்தால் மிக ஆபத்தான பார்வைக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. இதை பண்டக்காலத்து பாரத மக்கள் சூரிய சாபம் என்றழைத்திருன்தனர். நீரில் பிரதிபலித்திருக்கும் சூரியன் வருண பகவானுடன் இணைந்திருப்பதால் இக்காட்ச்சி விளக்கப்பட்டது என்று தொன்று தொட்டே நம்பியிருந்தனர்.

No comments:

Post a Comment