Wednesday 17 June 2015

மறைக்கப்பட்ட பெண் விஞ்ஞானி


        எல்லா துறைகளுக்கும் முன்னோடியாக அரிஸ்டாட்டிலை சொல்வார்கள். வேதியியலை பற்றி அவர் விரிவாக சொல்லவில்லை. அந்த வேதியியலை தனிப்பெரும் துறையாக அடையாளம் காண வைத்த பெருமை மரியா ஜுயசையை சேரும்.

  மரியா தனது கண்டுபிடிப்புகளை 'மரியா ப்ராக்டிகா' என்ற நூலில் எழுதியுள்ளார். சோதனைகள் மூலம் நேரடியாக காணும் உண்மைகளையே அதில் எழுதியிருந்தார். உலோகங்கள் தனிமங்களா என்ற ஆய்வில் இருந்து அவற்றின் உருகும் தன்மை போன்ற 7௦க்கும் மேற்பட்ட உலோக தனிமனகளை பட்டியலிடும் வேலையை செய்துள்ளார்.

    உயிரினகளில் ஆணும், பெண்ணும் உறவு கொண்டு ஒரு புதிய உயிர் தோன்றுகிறது. அந்த உயிர் தனது தாய் தந்தையரின் பண்புகளை பெற்றிருப்பதுபோல இரண்டு வெவ்வேறு உலோக தனிமங்கள் ஒன்றினையும் போது கிடைக்கும் புதிய கலவை, அந்த இரண்டு தனிமங்களின் பண்புகளோடு புதிய சிறப்பு பண்புகளையும் பெறுகிறது என்று முதலில் உலகுக்கு உணர்த்தியவர் மரியாதான்.

  தங்கத்தை பெண்கள் அணியும் அணிகளாக மாற்றியவர் இவர்தான். தங்கத்தை காரட்டு என்ற புதிய அளவையில் அளக்க வேண்டும் என்று காரட்டை அறிமுகப்படுத்தியவரும் இவர்தான். 24 கேரட் தங்கத்தில் தாமிரம் போன்ற மற்றறொரு தனிமத்தை சரியான விகிதத்தில் கலந்தால் மட்டுமே அதை அணிகலனாக வளைக்க முடியும். இந்த ஒப்பற்ற கண்டுபிடிப்பை நிகழ்த்தி 22 காரட் தங்கத்தை அதை உருவாக்கி காட்டியவர் மரியாதான்.

       பாதரசம், சல்பர், காரியம் போன்றவற்றை உயர் நோதிநிலைக்கு உட்படுத்தி அந்த வெப்பத்தில் தாமிரத்தை உருக்கும் புதிய உத்தியை கண்டுபிடித்தார். சல்பரின் ஆவிநிலை தங்கம் போல பளபளக்கும். அதிலிருந்து தங்கத்தை பிரித்தெடுக்க முயன்றார். பின்னர் அது தவறு என்பதை கண்டுபிடித்தார். அதை வெள்ளி சல்பைடு என்ற புதிய தனிமமாக கண்டறிந்தார். இது இன்னும் உலோக வேளைகளில் 'நைலோ' என்ற பெயரில் துருஎராமல் இருக்க சேர்க்கப்படுகிறது.

       இத்தனை கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய மரியாவை சுத்தமாக சரித்திரமும் விஞ்ஞானமும் கண்டுகொள்ளவில்லை என்பது தான் துயரம்.ஏசுவின் சமகாலத்தில் வாழ்ந்தவர் மரியா. அதனால் பெயர் குழப்பங்களும் உள்ளன. பைபிளில் வரும் மொசஸின் சகோதரி மிரியம் என்பவர்தான் மரியா என்று குறிப்பிடுவர்களும் உண்டு.

      உலகின் முதல் பெண் விஞ்ஞானியாக மரியாவைத்தான் சொல்கிறார்கள். வேதியியல் எனும் தனித்துறை உருவாக காரணமே மரியா ஜூயஸ்தான். இவரை பெண் அரிஸ்டாட்டில் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

No comments:

Post a Comment