Wednesday 17 June 2015

வைரங்களின் மதிப்பு



   ஆதிகாலம் முதலே வைரம் என்றால் மனிதனுக்கு அதன் மீது ஒரு அலாதியான கவர்ச்சி உண்டு. 15ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை வைரக்கல் மிக அரிதாக இருந்தது. அரச குடும்பங்களின் உடமையாக மட்டுமே இருந்தது. பளபளக்கும் இந்தக்கல் இத்தனை வசீகரம் பெற காரணம் என்ன?


        பல காரணங்கள் உள்ளன. முதலாவது வைரம் அரிதான ஓன்று. குறைவாக கிடைப்பது. எப்போதுமே விலை மதிப்பற்றது. அடுத்தது பளபளக்கும் இந்த கல்லின் மீது ஒளி படும்போது இதன் கவர்ச்சி பன்மடங்காகிறது. மக்கள் இதன் கவர்ச்சியில் கிரங்குகின்றனர். அடுத்தது, உலகிலேயே கடினமான பொருள் வைரம். இதனால் பல நூறு ஆண்டுகள் வரை அழியாமல் இதன் மெருகும் பளபளப்பும் குறையாமல் இருக்கும்.

  இயற்கையாக கிடைக்கும் வைரத்திற்கு அத்தனை அழகு கிடையாது. அதனை கலைத்திறனுடன் நுணுக்கமாக செதுக்கி பட்டை தீட்டி, மேருகிட்டால் நாலாபுறமும் ஒளிவீசும். வைரத்தை வெட்டி பட்டை தீட்டுவதற்கு அனுபவமும், கைத்திறனும் வேண்டும். வைரம் பதித்த சுழலும் சக்கரத்தால் தான் இதனை வெட்ட முடியும். வைரத்தை எவ்வளவுக்கு எவ்வளவு செதுக்கி பட்டை தீட்டுகிறோமோ அதற்கேற்ப அதன் மதிப்பு அதிகரிக்கிறது.

    வைரத்தின் உருவ அளவை வைத்து அதன் விலை மதிப்பிடப்படுகிறது. சிலவகை வைரங்கள் கிடைப்பது அரிது. சிவப்பு மற்றும் நீல ஒளி வீசும் வைரங்கள் மிக அரிதாக காணப்படுகிறது. ஆகவே இவை விலை மிகுந்தவை.

    வைரம் முதன்முதலில் இந்தியாவில்தான் காணப்பட்டதாம். கோகினூர் வைரம் உலக பிரசித்தி பெற்றது. சிலகாலம் முன்பு வரை இயற்கையில் மட்டுமே கிடைத்து வந்தது. இப்போது செயற்கை வைரங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment