Saturday 27 June 2015

மாயன் கோவில்கள்


       அரசியல், ஆன்மிகம், பொருளாதாரம், சமூக அமைப்பு என பல விதங்களில் சிறந்து விளங்கியவர்கள் மாயன் நாகரிக மக்கள். இவர்கள் காலத்தில் நிறைய கோவில்கள் கட்டப்பட்டிருக்கின்றன. அவை இன்றும் மாயன் நாகரிகத்தை உலகத்துக்கு சொல்லிக் கொண்டிருக்கின்றன.

       மெக்சிகோ தேசத்தில் இருக்கும் யுகாடன் மாநிலத்தில் மெரிடா நகருக்கு 75 மைல் தூரத்தில் அமைந்துள்ளது புனிதமாக கருதப்படும் சிச்சென் இட்ஸா. இதை மாயன் மக்களின் கலாசாரத்தை பிரதிபலிக்கும் இடமாக கருதுகின்றார்கள். 6 மைல் தூரத்துக்கு 1௦௦ கட்டிடங்கள் இருந்தன. இப்போது வெறும் 3௦ கட்டிடங்களே எஞ்சியுள்ளன.

   மாயன் நாகரிகத்தை இரண்டு விதங்களாக பிரிக்கலாம். 7 முதல் 1௦ம் நூற்றாண்டு வரை வாழ்ந்த மாயா காலம். 1௦ம் நூற்றாண்டுக்கு பிறகு மாயன்-டோல்டேக் இணைந்த காலம். இது 13-ம் நூற்றாண்டு வரை இருந்தது.

    சிச்சென் இட்ஸா மக்கள் விவசாயம் செய்து பிழைத்து வந்தனர். நல்ல விளைச்சலால் பல இடங்களில் இருந்து வந்த மக்கள் அங்கேயே தங்க தொடங்கி விட்டனர். அவர்கள் நிறைய வழிபாட்டு தளங்களை உருவாக்குவதில் ஆர்வம் கொண்டனர். மாயன் மக்கள் காலத்தில் புனிதமாக கருதப்பட்ட சிச்சென் இட்ஸா, அவர்கள் காலத்துக்கு பிறகு வீழ்ச்சியை சந்தித்தது. மதச்சடங்குகள் அல்லது இறந்தவர்களுக்கு சடங்குகள் செய்வதற்கே சிச்சென் இட்ஸா செல்லத் தொடங்கினார்கள்.டோல்டேக் மக்கள் காலத்தில் பிரமிடு போன்ற வடிவம் உடைய கோவில்கள் கட்டப்பட்டன. அதில் சதுர வடிவ குகுல்கன் பிரமிடு முக்கியமானது. இது 75 அடி உயரம் உடையது. இதில் 37 அடி நீளம் கொண்ட இறக்கையுடைய பாம்பு உருவம் செதுக்கப்பட்டுள்ளது.

     டெம்பிள் ஆப் வாரியர்ஸ் பிரமிடு வடிவ கட்டடம்தான் டோல்டேக் மக்களின் தலைநகர் துலாவில் அமைந்திருக்கிறது. இதில் மாயன் மற்றும் டோல்டேக் கலாசாரம் தெரிகிறது.

           தி கிரேட்பால் கோர்ட் பந்து விளையாடுவதற்கான இடம். மிகப்பெரியது. சுற்றுச்சுவர் 12 மீட்டர் உயரம் கொண்டது. பிரமிடு வடிவ கோவில்கள் எல்லாம் வானியல் ஆய்வுக்கு பயன்பட்டிருகின்றன. குறிப்பிட்ட நாளில் சூரிய கதிர்கள் பிரமிடின் குறிப்பிட்ட இடத்தில் விழுமாறு அமைத்திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment