Monday 29 June 2015

பிளேடு உருவான விதம்


பிளேடு இல்லாமல் ஆண்களின் காலைப் பொழுது விடியாது. ஆண்களின் தினசரி முகச்சவரத்திற்கு பிளேடு மிக முக்கியம். இவர்கள் தினமும் சலூன் சென்று சேவிங் செவதற்கு பொருளாதாரமும், நேரமும் இடம் கொடுக்காது.

அதனால் அவர்களே சொந்தமாக சேவிங் முகத்தில் வளருகின்றன. இந்த வளர்ச்சி ஒரு நாளைக்கு அரை மில்லி மீட்டர் என்ற அளவில் இருக்கும். இந்த ரோமத்தை தினமும் ஷேவிங் செய்து எடுப்பது அலுவலம் செல்லும் ஆண்களுக்கு கட்டாயம். காவல்துறை, மிலிட்டரி போன்ற சீருடைப் பணியாளர்களுக்கு கொஞ்சம் முடி எட்டி பார்த்தாலும் சிக்கல் தான்.

ஆண்கள் ஷேவிங் செய்து கொள்வது இன்று நேற்றல்ல, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றி விட்டது. முதன் முதலில் சிக்கிமுக்கி கல்லை முகத்தில் தேய்த்து தேய்த்து முடிகளை அகற்றினார்கள்.

அதன் பின்பு வெண்கலம் வந்தது. அதற்கடுத்து இரும்பாலான பிளேடுகள் உபயோகத்துக்கு வந்தன. தினமும் அந்த பிளேடுகளை கூராக்கிக் கொள்ள வேண்டி இருந்தது.

தினம் தினம் இப்படி போராடிக் கொண்டிருந்த இந்த விஷயத்தை கலகலப்பாக்கியவர் கிங் கேம்ப் கில்லெட் என்பவர். 1895-ல் கூறாகிக் கொள்ள தேவையில்லாத ரெடிமேட் பிளேடை கண்டுபிடித்தார். அந்த பிளேடுக்கு சில்லேட் வில்லியம் நிகல்சன் என்பவர் ஒரு கைபிடியை கண்டுபிடித்தார். அந்த கைபிடியில் பிளேடை பொருத்தி ரேசர் என்ற கருவியை கண்டுபிடித்தார்.

சேப்டி ரேசர், ஸ்டீல் எட்ஜ்டு ரேசர், எலக்ட்ரிக் ரேசர் என 3 வகை ரேசர்கள் உள்ளன. இதில் கில்லெட் கண்டுபிடித்தது சேப்டி ரேசர். 1901-ல் ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எரியும் ரேசர்கள் உபயோகத்திற்கு வந்தன.

பொதுவாக ரேசர் பிளேடுகள் எக்குவால் செய்யப்படுகின்றன. இதில் 13 சதவீதம் குரோமியம் உள்ளது. இது துருப்பிடிக்காத கடினத் தன்மை கொண்டது. பிளேடின் கூரான முனை உடையாமல் இருக்காவும், உராய்வுத் தன்மையோடு இருக்கவும், பிளேடின் கூரான பகுதியில் குரோமியம், செராமிக், டெப்லான் பூச்சு செய்யப்படுகிறது.

இந்த பூச்சுகள் அனைத்தும் சேர்ந்து ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு பங்கு தடிமன் அளவுக்கு தான் இருக்கும்.

1904-ல் அமெரிக்காவில் ரேசர்கள் விற்பனை தொடங்கியது. ஆரம்பத்தில் மிக மந்தமாக இருந்த விற்பனை, விளம்பரத்தின் உதவியால் உச்சத்தை தொட்டது.

இன்றைக்கு பிளேடு விற்பனை மிக முக்கியமான நுகர் பொருளாக உள்ளது.

No comments:

Post a Comment