Saturday 27 June 2015

தொப்பையை கரைக்கும் அன்னாசி


அன்னாசி பழத்தில் வைட்டமின் பி உயிர்ச்சத்துகள் அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்யவும், பலத்தை தரவும் செய்கிறது. பல வியாதிகளை குணப்படுத்தும் மருந்தாக இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசி பலம் சிறந்த டானிக் ஆகும்.

நன்றாக பழுத்த அன்னாசி பலத்தை சிறுசிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் தூசிபடாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்துக் கொள்ளவேண்டும். ஒரு தம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை அரை மணி நேரம் ஊற வைத்து படுக்கும் முன் குடிக்க வேண்டும். இப்படி ஊறிய வற்றல்களை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தொடர்பான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசிப் பழச்சாற்றை தொடர்ந்து குடித்துவர முகம் பொலிவு பெரும். இளம் பெண்கள் உள்பட அனைவரின் தொப்பையையும் கரைக்கும் சக்தி அன்னாசிக்கு உண்டு.

ஒரு அன்னாசிப் பலத்தை சிறு துண்டுகளாக நறுக்கி 4 தேக்கரண்டி ஓமத்தை பொடி செய்து அதில் போட்டு நாற்றாக கிளறி ஒரு தம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து இறக்கி இரவு முழுவதும் அப்படியே வைக்கவும். மறுநாள் காலையில் அதை பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் குடிக்கவும். இப்படி 1௦ நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் தொப்பை கரையத் தொடங்கும்.

இஞ்சிச் சாற்றை பாலில் கலந்து சாப்பிட உடல் எடை குறையும். ஊற வைத்த அவளை காலையிலும் இரவிலும் சாப்பிட்டு வர உடல் எடை குறையும். 3௦௦ கிராம் கருணைக் கிழங்கை தினமும் மதிய உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறையும். பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு ஆகியவற்றறை சேர்த்து அவித்து கடைந்து சாப்பிட்டால் உடலில் உள்ள திகப்படியான கொழுப்பு குறையும். காசினிக் கீரையை உலர்த்தி பொடியாக்கி தினமும் இரவில் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

No comments:

Post a Comment