Saturday 13 June 2015

காகம் கத்தினால் விருந்துக்காரர் வருவருவார்களா?


                                                 "கதலி வாழைக்கையிலிருந்து
                                                  காகமின்று விருந்தழைத்தது"


             ஒரு தலைமுறை மனப்பாடமாக்கிப் பாடிக் கொண்டிருந்த ஒரு பாடலின் இருவரிகளின் சாரம் மேலே கண்டீர்கள்.

காகம் கத்தினால் விருந்துக்காரர்கள் வருவார்கள் என்ற விசுவாசம் இன்றைய வீடுகளிலும் பழக்கமானது. விருந்தினரை வரவேற்பதிலும் அவர்களை தேவனுக்கு சமமாக நடத்துவதிலும் நம் நாட்டினர் கொண்டிருந்த நாட்டம் பண்டை காலத்திலே பிரசித்தியானது. காகத்துக்கு நம் நாட்டு வாழ்க்கையில் அளித்துள்ள இடமும் இந்த நம்பிக்கையின் பின்னிலுள்ளது.

காகங்களை முன்னோர்களாகக் கருதி அவைக்கு உணவூட்டும் வழக்கமும் இன்றும் நம் நாட்டிலும் நிலை நிற்கின்றது. காகம் கத்தும் திசைக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றனர். விருந்தினர் வருவதைக் காகங்கள் எவ்வாறு முன்கூட்டி அறிகின்றன என்று அதிசயிக்கும் முன், காகம் கத்தும் போதெல்லாம் விருந்தினர் வருகின்றார என்றும் விருந்தினர் வந்ததற்கு முன் காகம் கத்தினதா என்றும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

காகம் கத்தினால் விருந்தினர் வருவார் என்பது, விருந்தினர் வந்தால் காகம் கத்தும் என்பதன் உருமாற்றம் மட்டுமே. விருந்துக்காகப் பரிமாறும் உணவு வகைகளின் மிச்சம் அருந்துவதற்காக காகங்கள் வந்து சேருவது வழக்கம். இதிலிருந்து விருந்து கழிந்தால் காகம் கத்தும் என்று உரைக்கப்பட்டது. இது காலப்போக்கில் உருமாறி 'காகம் கத்தினால் விருந்தினர் வருவர்' என்று ஆனது.

No comments:

Post a Comment