Tuesday 9 June 2015

மலம் மற்றும் சிறுநீர் கழித்த பின் கொப்பளிப்பது ஏன்


இந்த காலத்தில் இதை யாரும் அதிகமாக பொருட்படுத்துவதில்லை என்றாலும் மலம், நீர் கழிப்பதற்கும் பண்டைக்காலத்தில் விதிமுறைகள் படி செய்திருந்தனர். சுற்றுச் சூழலுக்கு தீன்குவராமலும், உடல்நிலை பாதிக்கப்படாமலும் பாதுகாக்கவே இவ்வித முறைகள் கடைபிடிக்கப்பட்டன.

தம்மைச் சிற்றி குடியிருப்பதாக கருதப்படும் தேவர்கள், பூதங்கள் மற்றும் ஆவிகளிடமும் தாவரங்கள் மூலிகைகள் முதளியவையிடமும் தான் அவ்விடத்தை அசுத்தமாக்குவதாகவும் அங்கிருந்து அகன்று நிற்க வேண்டும் என்று மூன்று முறை கைதட்டி வேண்டிக்கொள்ள வேண்டும். இக்காலத்திலுள்ள நவீன கழிப்பறைகளை உத்தேசித்து இவ்விதிகளை ஏற்படுத்தவில்லை. பின் தலயும் மூக்கும் தினியால் மூடி, இருக்குமிடத்தின் இடது பக்கம் நீர்பாத்திரமும் வைத்து, பகல் நேரம் வடக்கு திசை நோக்கியும் இரவானால் தெற்கு நோக்கியும் இருக்க வேண்டும் என்பது விதிமுறை.

இவையெல்லாம் கடைபிடிக்கலாம் என்றாலும் கழிவு முடிந்த பின் கொப்பளிக்க வேண்டும் என்பதன் பின்னாலுள்ள நம்பிக்கை கேள்விக்குள்ளாகும். ஆனால் இது பற்றிய விஞ்ஞான இயல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. களிவுப்போருட்கலான மலம் மற்றும் சிறுநீரில் அணுக்கள் அடங்கியிருக்கும். வயிற்றினுள் குடலிலிருந்து மலம் அல்லது சிறுநீர் வெளியேறும் பொது துர்நாட்டமுடைய வாயு மேலெழும்புவது வழக்கம். அப்போது துர்நாற்றமும் நோயனுக்களும் பரவும். இவ் அணுக்களையும் துர்நாற்றத்தையும் அகற்ற கொப்பளிப்பதே சரியான வழி. இப்படி செய்யா விட்டால் நாற்றத்தையும் நோயனுக்களையும் தேவையில்லாமல் சேர்த்து வைக்க வாய்ப்புண்டு.

1 comment: