Wednesday 22 July 2015

சுனிதா வில்லியம்சின் புதிய கவுரவம்


இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்சுக்கு இப்பொழுது ஒரு புதிய கவுரவம் கிடைத்திருக்கிறது. அது, சர்வதேச விண்வெளி நிலையத்துக்குத் தலைமை ஏற்பது. இந்தப் பெருமை பெரும் இரண்டாவது பெண் சுனிதா.

'எக்ஸ்படிஷன் 32' குழு, நான்கு மாத கால விண்வெளிப் பயணத்தை முடித்துக் கொண்டு சமீபத்தில் பத்திரமாகப் பூமிக்குத் திரும்பியது. இந்நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்துக்குத் தலைமை ஏற்றிருக்கிறார் சுனிதா. விண்வெளி வீராங்கனைகளில் மூன்று சாதனைகளைப் படைத்திருக்கிற சுனிதாவுக்குக் கிடைத்திருக்கிற அறிய கவுரவம் இது.

'எக்ஸ்படிஷன் 32' குழுவுடன் சோயுஸ் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பிரிந்தபோது, கமாண்டர் கென்னடி படால்காவிடம் இருந்து தலைமை பொறுப்பை ஏற்றார் சுனிதா. விண்வெளி வரலாற்றில் இவ்வாறு தலைமை ஏற்றிருக்கும் இரண்டாவது பெண்மணி இவர். இதற்கு முன், 2007, 2008-ம் ஆண்டுகளில் 'எக்ஸ்படிஷன் 16' குழுவின் விண்வெளி சுற்று பயணத்துக்கு பெக்கி விட்சன் என்ற விண்வெளி வீராங்கனை தலைமை தாங்கியுள்ளார்.

படால்காவிடம் இருந்து தலைமைப் பொறுப்பை ஏற்கும் போது பேசிய சுனிதா வில்லியம்ஸ், "விண்வெளியில் எப்படி இருப்பது, பணிபுரிவதுடன், எப்படி ஜாலியாக பொழுதைக் கழிப்பது என்பதையும் கற்றுக் கொடுத்த 'எக்ஸ்படிஷன் 32' குழுவுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன்." என்றார்.

No comments:

Post a Comment