Friday 24 July 2015

தலை காயத்திற்கான முதலுதவி


தலையில் அடிபடுவத்தின் காரணமாக உண்டாகும் எந்தவொரு காயமும் ஆபத்தானதுதான். அதற்கு உடனே மருத்துவரின் உதவியை நாட வேண்டும். மூளை பாதிக்கப்பட்டால், நினைவு திரும்பாத நிலைக்கு இட்டுச் சென்றுவிடும். தலையில் அடிபட்டால் மூர்ச்சையடைவார், நாடித்துடிப்பு அதிகரிக்கும், பலவீனமாக இருக்கும். வாய் மூக்கு, காதுகளிலிருந்து ரத்தம் வரும். தலைவலி, வாந்தி, பார்வை மங்கல் உண்டாகும்.

மூளை அதிர்ச்சித் தாக்குதல்
மூளையானது நமது மண்டை ஓட்டினுள் ஒரு சிறிது அசையும் தன்மையுடையதாக இருக்கிறது. தலையில் அடிபடும்பொழுது மூளை பலமான அதிர்வுக்கு ஆளாகிறது. இதுதான் concussion என்னும் மூளை அதிர்ச்சித் தாக்குதலாகும். இதற்கு அடையாளம் அவர் முற்றிலும் அல்லது ஓரளவு நினைவிழந்துவிடுவார். தேவையென்றால் உடனே மருத்துவத்துக்கு உதவி நாடவும்.

முதலுதவி

  1. பாதிக்கப்பட்டவரை ஒருக்களித்துப் படுக்க வையுங்கள். அவரது சுவாசம், நாடித்துடிப்பு முதலியவற்றைப் பரிசோதியுங்கள்
  2. மூன்று நிமிடங்களுக்குள் வருக்கு நினைவு திரும்பவில்லை என்றால் உடனே ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனையில் சேருங்கள்.
  3. விளையாட்டுப் போட்டிகளில் ஒருவருக்கு இவ்வாறு நேர்ந்ததென்றால், மருத்துவரின் அனுமதியின்றி மீண்டும் அவரை விளையாட அனுமதிக்க கூடாது.

No comments:

Post a Comment