நமது உடலிலுள்ள கணையத்திலிருந்து (pancreas) சுரக்கும் இன்சுலின் எனப்படும் ஹார்மொனே நம் ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவை சமச்சீராக வைத்திருக்கிறது. ஆனால், சர்க்கரை வியாதி உள்ளவருக்கு கணையத்திலிருந்து தேவையான அளவு இன்சுலின் சுரப்பதில்லை, அதனால், அவருக்குக் களைப்பு, உடல் எடைக் குறைவு, அடங்காத தாகம், அடிக்கடி சிறுநீர் போதல் போன்றவை உண்டாகின்றன. சர்க்கரை வியாதி என்று தெரிந்துவிட்டால், வாழ்க்கை முறையை அதற்கேற்ப மாற்றி வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.
ஒரு மனிதர் திடீரென்று குழப்பமாகக் காணப்படுகிறார், முன்னுக்குப்பின் முரணாக நடக்கிறார், உணர்விழந்து விடுகிறார் என்றால் அவருக்கு சர்க்கரை வியாதியால் மயக்கம் அல்லது இன்சுலின் எதிர் வினை (Insulin Reaction) என்று தெரிந்து கொள்ளலாம். அப்போது அவருக்கு அதிகமாக வியர்க்கும், நாடித் துடிப்பு அதிகரிக்கும், மூச்சு விடுவது சிரமப்படும்.
முதலுதவி
- அவருக்கு உணர்விருந்தால் சர்க்கரை, கற்கண்டு, பழச்சாறு போன்ற இனிப்புப் பானங்கள் கொடுக்கவும்.
- உணரவில்லையென்றால், ஆம்புலன்ஸ் வரவழைத்து உடனே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள்.
No comments:
Post a Comment