Friday, 24 July 2015

பல் வலிக்கான முதலுதவி


     சொத்தைப் பல் உடையவர்கள். மிகக்குளிர்ந்த அல்லது உஷ்ணமான உணவோ, பானமோ உட்கொண்டால் அவர்களுக்குப் பல்வலி வரும். சைனஸ் தொல்லையினாலும், காதில் தொற்றுநோய்க் கிருமிகள் பற்றிக்கொள்வதினாலும் ஒருவருக்குப் பல்வலி உண்டாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல் உள்ள அனைவருக்கும் பல்வலி வரும்.


அறிகுறிகள்

  1. பற்களில் வலி இருக்கும்.
  2. ஈறுகளில் ரத்தம், சீழ் வடியும்.
  3. ஒரு பக்கக் கன்னம் வீங்கும்.

முதலுதவி
  1. பெரியவர்கள் இரண்டு பாரசிட்டாமால் வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்ளலாம். குழந்தைகளுக்கு பாரசிட்டாமால் சிரப் கொடுக்க வேண்டும்.
  2. சூடான நீர்ப் பையினால் பல்வலி உள்ள கன்னத்தில் ஒத்தடம் கொடுங்கள்.
  3. சொத்தைப் பல்லினுள் கிராம்பு தைலத்தில் நனைத்த பஞ்சை வைத்து கொள்ளவும்.
  4. முதுகின் பின்னால் தலையணையை வைத்து சாய்ந்து படுத்துக் கொள்ளச் சொல்லுங்கள். நேராகப் படுத்தால் பல்வலி அதிகரிக்கும்.
  5. பல்வலி குறையவில்லை என்றால் பல் மருத்துவரிடம் அழைத்துச் செல்லவும்.

No comments:

Post a Comment