Sunday, 9 August 2015

கிரிக்கெட் பிரியர் உசேன் போல்ட்!


ஒலிம்பிக் 100 மீட்டார், போட்டியில் வெற்றி பெற்று, 'உலகின் மிக வேகமான மனிதர்' என்ற பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிற உசைன் போல்ட்டுக்கு படித்த விளையாட்டுகளில் ஓன்று, கிரிக்கெட்.

கிரிக்கெட்டுக்குப் புகழ்பெற்ற மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான ஜமைக்காவில் பிறந்ததால் இவருக்கு இயல்பாகவே கிரிக்கெட் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. வேகப்பந்து வீச்சாளராக ஆசைப் பட்ட போல்டை ஓட்ட பந்தயத்தின் பக்கம் திருப்பி விட்டவர் அவரது பள்ளி விளையாட்டு ஆசிரியர் தான்.

தீவிர கிரிக்கெட் ரசிகரான தனது தந்தையுடன் பல கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்திருக்கிறார் உசைன் போல்ட். சில காட்சிப் போட்டிகளில், வெஸ்ட் இண்டீஸ் வீரகளுடன் இணைந்து ஆடியும் இருக்கிறார். போல்ட்டுக்கு பிடித்த கிரிக்கெட் வீரர், பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனுஸ். மற்றொருவர் நம்ம சச்சின்-னே தான்..........

No comments:

Post a Comment