வயதாவது குறித்த கவலை ஆண்களை விடப் பெண்களுக்கு அதிகம் உண்டு. ஆனால் சரியாக 29-வது வயதில் தான் வயது குறித்த பயம் பெண்களைப் பற்றிக் கொள்கிறதாம்.
இங்கிலாந்தைச் சேர்ந்த ஒரு சருமப் பராமரிப்பு சாதனத் தயாரிப்பு நிறுவனம் இது தொடர்பாக 2 ஆயிரம் பெண்களிடம் ஒரு சர்வே மேற்கொண்டது. அப்போது, பெண்களுக்குத் தங்கள் '2௦' வயதுகள் கூடக் கூட, வயது குறித்த பயமும் மெதுவாக வளர்வது தெரியவந்தது.
உண்மையில் டீனேஜ் பெண்கள் தங்கள் வயதை விட அதிக வயது கொண்டவர்களாகத் தோற்றம் காட்ட விரும்புகிறார்கள். அத்தகையவர்களுக்கு, 2௦ வயதுகளின் ஆரம்பம்தான் நல்ல திருப்தி தருகிறது. ஆனால் 3௦ வயதை நெருங்குகையில் அந்தத் திருப்தி மறைந்துவிடுகிறது. மாறாக், வயது அதிகரிப்பது குறித்த பயம் படிக்கத் தொடங்கிவிடுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
No comments:
Post a Comment