Thursday 12 November 2015

வழிகாட்டபோகும் கார் கண்ணாடி


     கார் முன் தடுப்புக் கண்ணாடி எதற்குப் பயன்படுகிறது என்பது தெரியுமா? இதென்ன புது கேள்வி, பாய்ந்து வரும் காற்றில் இருந்தும், வெளிப்புறச் சூழல், மாசுகளில் இருந்து காப்பதற்க்கும்தான் என்கிறீர்களா? ஒரு நிமிடம், வருங்காலத்தில் கார் முன் தடுப்புக் கண்ணாடி, டிரைவருக்கு வழிகாட்டப் போகிறது. ட்ரூ 3d  என்ற புதிய தொழில் நுட்பத்தின் மூலம், கண்ணாடியில் வழிகாட்டும் சைகைகள், தகவல்களை அளிக்கும் ஒரு புதிய சாதனம் உருவாக்கப்படிருக்கிறது. இந்த ஆண்டு ஜெர்மனியின் மியூனிச் நகரில் நடைபெற்ற, ஐரோப்பிய சாட்டிலைட் வழிகாட்டல் போட்டி யில் இந்த சாதனத்துக்கு முதல் பரிசு கிரைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

          லேசர் அடிப்படையிலான இந்த அமைப்பு, ஒரு சிவப்பு முப்பரிமாணக் கோட்டை உங்கள் கார் கண்ணாடியில் இருந்து சாலை நோக்கி நீட்டும். சாலை மீது மிதந்து செல்லும் இக்கோட்டை டிரைவர் பின்பற்றினாலே போதும்.ரெயில் இருப்புப் பாதையில் செல்வதைப் போல, குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றுவிடலாம். கவனத்தைத் திசை திருப்பாத, தொந்தரவில்லாத, ஒளிஊடுவக்கூடிய வலிகாட்டிக்கோடாக இது இருக்கும் என்கிறார்கள். அதேநேரம், சாலைக் குறிகள், எதிர்வரும் முக்கிய இடங்கள், கட்டிடங்கள் போன்ற தகவல்களும் கண்ணாடியில் தெரியும்.

          அடுத்தடுத்து புதிது புதிதாக தகவல்கள் வந்து கொண்டே இருப்பதால் டிரைவர்களுக்கு போரடிக்காது என்றும் இந்த சாதனத்தை தயாரித்து இருக்கும் நிறுவனம் கூறுகிறது. தற்போது இதை, கட்டுப்படியாகக் கூடிய விலையில் தயாரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது... 

No comments:

Post a Comment