Sunday 22 January 2017

ஆயிரம் வருட மரங்கள்





      மரங்களுக்கும் ஆயுள் உண்டு. பெரும்பாலான மரங்கள் 5௦ முதல் 200 ஆண்டுகள் வரை சாதரணமாக உயிர் வாழக்கூடியவை. ஆனால் ஒரு சில மரங்கள் இருக்கின்றன. அவை சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கி இன்றைய காலம் வரை அனைத்து நிகழ்வுகளையும் பார்த்துக் கொண்டிருக்கின்றன. அவற்றில் வித்தியாசமாக சில மரங்கள் இங்கே

      உலகின் உயரமான மரங்கள் அனைத்தையுமே செகோயா இனம் என்றுதான் சொல்கிறோம். இந்த மரங்கள் கிடுகிடுவென 380 அடி உயரத்துக்கு வளர்ந்து விடும். இதன் அகலம் 26 அடி இருக்கும். இதன் ஆயுள் 2,200 வருடங்கள் இவற்றின் விதைகள் மட்டுமல்ல கிளை ஒடிந்து விழுந்தால் கூட அது இன்னொரு மரமாக முளைக்கும். ஒரு மரமே விழுந்தால் அங்கு ஒரு காடே உருவாகும்.

      பாவோ பாப் என்கிற மரத்தை குண்டு கத்திரிக்காய் மரம் என்கிறார்கள், தாவரவியல் அறிஞர்கள். இதன் சுற்றளவு 47 மீட்டர் வரை இருக்கும். உயரம் வெறும் 98 அடிதான். இதன் தண்டுப் பகுதியில் 1 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமித்து வைத்துக் கொள்ளும். வறட்சி காலத்தில் அந்த நீரை பயன்படுத்திக் கொள்ளும். இதன் ஆயுள் காலம் 6 ஆயிரம் வருடங்கள். தென் ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு மரத்தின் தண்டு பகுதியை குடைந்து 60 பேர் அமர்ந்து மது குடிக்கும் பார் ஒன்றை நடத்தி வருகிறார்ளாம்.

      வெல்வேட்ஷியா மிராப்லிஸ் என்பது பாலைவனம் போன்ற வரட்சியான பகுதிகளில் மட்டும் வளரும் தாவரம். இரண்டே இரண்டு இலைகள் மட்டுமே இதற்கு உண்டு. அதிக வரட்சியில் இந்த இழைகள நார்நாராக கிழிந்து போய் குப்பை போல குவிந்து கிடக்கும். இது ஒரு செடி என்பதையே யாராலும் கண்டுபிடிக்க முடியாது. வாடி வதங்கி கிடந்தாலும் இதன் ஆயுசு கெட்டி. இரண்டாயிரம் ஆண்டுகள் வரை சர்வசாதாரணமாக தாக்குபிடிக்கும். இப்படியாக ஆயிரம் ஆண்டுகள் தனது நிற்கும் மரங்களும், தாவரங்களும் நிறைய உண்டு.

No comments:

Post a Comment