Sunday 29 January 2017

உயிரை திருடிய திருட்டுகள்


   திருட்டில் பலவகைகள் உள்ளன. அவற்றில் சில வகைகளை பார்க்கலாம். பிரான்சு நாட்டில் லூமிஸ் செக்யுரிட்டி என்ற நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தவர் டோனி முஸ்லின். வங்கிகளில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பணத்தை கொண்டு செல்ல லூமிஸ் செக்யுரிட்டியை தான் அழைப்பார்கள். அந்த அளவுக்கு அந்த நிறுவனத்தின் மீது நம்பிக்கை.

   ஒருமுறை இந்திய மதிப்பில் 80 கோடி ரூபாய் மதிப்பில் பணத்தை ஏற்றி கொண்டு டோனி கிளம்பினார். இரண்டு செக்யுரிட்டிகளையும் சேர்த்து மொத்தம் மூன்று பேருடன் வேன் புறப்பட்டது. வழியில் இரண்டு செக்யுரிட்டிகள் உணவு அருந்த இறங்கினர். அந்த நேரத்தில் வண்டியை கிளப்பிக்கொண்டு டோனி சென்றுவிட்டார். பின்பு போலீஸ் டோனியை தேட ஆரம்பித்தது. ஒருவழியாக வேனை கண்டுபித்தபோது அதில் டோனியும் இல்லை, பணமும் இல்லை. ஜாலிய சுற்றித்திருந்த டோனியை ஒரு வாரத்திலேயே சுற்றிவளைத்தது போலீஸ். தனி மனிதனாக கத்தியின்றி, ரத்தமின்றி, கோடிக்கணக்கான பணத்தை சுருட்டியவன் என்ற பெருமையை டோனி பெற்றான்.

   விளையாட்டாய் திருடுபவர்கள் மற்றொருவகை. அப்படி விளையாட்டாய் திருடி, உயிரை விட்டவர்கள் கதைகளை இப்போது பார்க்கலாம். வளைகுடா நாடு ஒன்றுக்கு சென்ற இந்தியர் ஒருவர் பாக்கெட் பிரிக்கப்பட்ட கசகசா பக்கெட்டை கையில் வைத்திருந்தார். இந்திய விமான நிலைய கஸ்டம்ஸ் சோதனையில் ஒரு திரில்லுக்காக அதை மறைத்து வைத்திருந்த அவர், அந்த நாட்டில் பிடிபட்டார். அங்கே அவருக்கு விதிக்கப்பட்டதோ, மரண தண்டனை காரணம், வளைகுடா நாடுகளில் கசகசா ஒருவகை போதைச்செயின் விதை.

   மங்கோலியர்களின் அரசரான செங்கிஸ்கான், ஒருமுறை தன அண்ணனோடு சாப்பிட அமர்ந்தான். இருவருக்கும் பொதுவாக ஒரு பெரிய மீனை வைத்தார்கள். பங்கிடும் பொறுப்பு அண்ணனுக்கு வந்தது. தம்பியோடு விளையாடி நெடுநாளாகி விட்டதால் பெரிய துண்டை பதுக்கி வைத்துவிட்டு சிறிய துண்டை சென்கிஷ்கனுக்கு கொடுத்தார். திருடர்களை தண்டிக்கும் வழக்கப்படி அடுத்த வினாடியே தனது அண்ணனின் தலையை வெட்டி வீழ்த்தினர், செங்கிஸ்கான். இப்படி வினோதமாகவும், விளையாட்டாகவும் செய்த திருட்டுகள் உயிரை பறித்ததும் உண்டு.

No comments:

Post a Comment