Tuesday 31 January 2017

பதிலடி தரும் இயற்கை


  சமீபகாலமாக உலகச்சுற்றுச் சூழலை உற்றுக் கவனித்தால் ஓன்று நன்றாகப் புலப்படும். இது இயற்கையின் சீற்றம். உலகின் பல பகுதிகளிலும் வறட்சி, வல்லம், புயல், பூகம்பம், பஞ்சம், கடல் கொந்தளிப்பு, காடுகள் தீப்பற்றி எறிதல் என்று அழிவு தொடர்பான செய்திகளை பார்க்கலாம். இதற்கெல்லாம் காரணம் பசிபிக் கடலில் ஊரும் வெப்ப நீரோட்டத்தின் மாறுதல்கள் தான் என்கிறார்கள்.

   வெப்ப நீரோட்ட விளைவை ‘எல் நினோ’ என்றும், குளிர் நீரோட்ட விளைவை ‘லா நினா’ என்றும் அழைக்கிறார்கள். 1997-ம் ஆண்டு பசிபிக் கடல் பகுதியில் கடல் மட்டத்தின் வெப்பநிலை இயல்பான அளவை தாண்டி, வழக்கத்தை விட வெப்ப நீரோட்டம் பொங்கி எழுந்தது. இது ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட 10 லட்சம் மடங்கு அழிவை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. அதே போலத்தான் அழிவையும் ஏற்படுத்தியது.

    அப்போது ஆரம்பித்த அழிவுப்படலம் இன்னமும் முடிந்த பாடில்லை. பசிபிக் கடலின் வெப்ப மாற்றத்தால் கடல் தாவரங்கள் அழிந்தன. கடல் மீன்கள் மாயமாய் மறைந்தன. மீன்களை நம்பி உயிர் வாழ்ந்த கடல்வாழ் உயிரினங்கள் உயிரை விடத்தொடங்கின. 70 கடல் சிங்கங்கள் பட்டினியால் செத்து கரை ஒதுங்கின. பெரிய பெரிய திமிங்கலங்கள் கரை ஒதுங்குவதேல்லாம் முன்பு அடிக்கடி கேள்விப்படாத ஓன்று.

    இப்படி பசிபிக் கடலில் ஏற்பட்ட மாற்றம் உலகத்தின் பல பாகங்களின் தட்பவெட்ப நிலையை மாற்றியது. ஆசியாவின் மத்திய பகுதியில் அனல் பறந்தது. பிரேசில் காடுகள் தீப்பிடித்து எரிந்தன. மலை இல்லாமல் விவசாய நிலங்கள் கருகின. ‘எல் நினோ’ என்பது வெறும் வறட்சியை மட்டுமே கொடுக்கும் என்று விஞ்ஞானிகள் நம்பிக் கொண்டிருந்தார்கள்.

   ஆனால் அதற்கடுத்த வருடமே அடித்து பெய்த  தொடர்மழை பல நாடுகளில் வெல்ல சேதத்தை ஏற்படுத்தியது. பயிர்களும், உயிர்களும் மடிந்தன. பஞ்சம் தலைதொக்கியது. மருத்துவமனைகளில் நோயாளிகளின் கோட்டம் நிரம்பி வழிந்தது. சரி, பசிபிக் கடலில் ஏற்படும் இந்த சின்ன மாற்றம் இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்துமா என்றால் கட்டாயம் ஏற்படுத்தும். வறட்சி என்றால் மலையே பெய்யவில்லை என்று அர்த்தமில்லை. வழக்கமாக பெய்யும் மலையில் 10 சதவீதம் அதிகமாக மலை பெய்தால் வெள்ளம் தான்.

    காடுகளை அழிப்பது, நகரமயமாக்கல் போன்ற காரணங்களால் தான் பருவமழை தவறிவிட்டது. ஒரு மரத்தை வெட்டினால் கூட அடுத்த வருடம் துளித்துளியாக மலை குறையும் என்கிறார்கள்.

    ‘எல் நினோ’ பிரச்சினை மட்டுமல்ல. வாகனங்கள் வெளியிடும் புகை, தொழிற்சாலை புகை என்று மேலும் மேலும் சுற்றுசூழலை மோசமாக்கி அண்டார்டிகா பனி படலத்திலும் கூட கரி படர்ந்துள்ளது.

    நாகரிகத்திற்கு நாம் கொடுத்த விலை தான் இது. இயற்கயை நாம் கிள்ளுக்கீரையாக நினைத்து இஷ்டத்துக்கு பால்படுத்தியதன் விளைவு தான் இத்தனை பாதிப்பு. இயற்கையை பால்படுத்தாதீர்கள். அது பதிலடி கொடுத்தால் நம்மால் தானாக முடியாது. இதற்கான ஒரே தீர்வு
மரம் நடுவோம்! இயற்கையை காப்போம்!


No comments:

Post a Comment