Friday 3 February 2017

அபூர்வ சகோதரிகள்


   ஒரு பிரசவத்தில் ஓன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பிறப்பதே அபூர்வமான ஓன்று. அதிலும் 3,4,5, என்று குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்தால் அந்த தாய் அதிசயமாகவே பார்க்கப்படுவாள்.

    இப்படித்தான் 28 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண் பார்க்கப்பட்டார். அவருக்கு ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள் பிறந்தான. அத்தனையும் பெண் குழந்தைகள். தற்போது அவருகளுக்கு 28 வயதாகிறது.

    மூத்த பெண்ணின் பெயர் ஹனா. மற்றவர்கள் லூசி, ரூத், சாராஹ், கேட் மற்றும் ஜெனி. ஒரு வீட்டில் இரண்டு பெண் பிள்ளைகள் இருந்தாலே அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வார்கள். நீங்கள் 6 பெரும் ஒரே வீட்டில் எப்படி சமாளிக்கிரீர்கள் என்று கேட்டால் அந்த கேள்விக்கே எங்களிடம் இடம் இல்லை. நாங்கள் அவ்வளவு ஒற்றுமையாக வளர்ந்தோம். நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே இதை பின்பற்றி வருகிறோம். இங்களுக்குள் பெரிய அளவில் ப்ரிச்சினைகள் வந்தது கிடையாது. சிறு சிறு பிரச்சினைகள் வந்தாலும், உடனே சமாளித்து விடுவோம். ஆனால் இப்போது தான் புதிய பிரச்சினை வந்துள்ளது. இவர்களில் இரண்டு பேர் தொழில் நிமித்தமாக வேறு இடங்களுக்கு பணிபுரியச் செல்லும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அது இங்களுக்கு பெரிய கவலையாக உள்ளது. என்றனர்.

   அந்த அபூர்வ சகோதரிகள் 6 பேரின் வாழ்க்கை கட்டங்களை அவர்களது பெற்றோர் பிறந்தது முதல் வீடியோ மற்றும் புகைப்படனகளாக பதிவு செய்து வருகின்றனர். அவற்றை அடிக்கடி பார்த்து பரவசப்படுவதாக அந்த சகோதரிகள் தெரிவித்தனர்.

    பொதுவாகவே ஒரே பிரசவத்தில் நிறைய குழந்தைகள் பிறந்தாள் அவற்றில் ஒன்றிரண்டு குழாந்தை பருவத்திலேயே இறந்து விடும். ஆனால் பிறந்த 6 குழந்தைளும் 28 வயது பருவப் பெண்களாக வளர்ந்து ஆரோக்கியமாக இருப்பது ஒரு அபூர்வமான சம்பவமே.

No comments:

Post a Comment