Friday 3 February 2017

உலக வர்த்தகச் சந்தை



   வர்த்தகச் சந்தைகள் எப்போது தொடங்கின என்று திட்டவட்டமாக கூற முடியாது. தகவல் தொடர்புகள் இல்லாத அந்த நாட்களிலேயே அன்றாடத் தேவைக்கான பொருளுக்காக மக்கள் வெகு தூரம் அலைய வேண்டி இருந்தது. பிறகு வணிகர்கள் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட இடத்தில் வர்த்தகப் பொருட்களுடன் வந்து கூடும் முறை ஏற்பட்டது.

  இந்த சந்தைகளில் மக்கள் தங்களிடம் உள்ள விலங்குகளின் தோலையும், தானியத்தையும் கொடுத்து தேவையான பொருட்களை வாங்கினர். தகவல் தொடர்புகள் அதிகரிக்கத் தொடங்கியவுடன் இதுபோன்ற வர்த்தக சங்கங்களின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது என்றாலும் திருவிழாக் காலங்களில் மக்களை மக்களை மகிழ்விக்கும் நோக்குடன் புதிய விழாச் சந்தைகள் தோன்றின.

   தொழில் துறையில் மிக வளர்ச்சியடைந்த இக்காலத்தில் நாடு பல துறைகளில் அடைந்துள்ள வெற்றிகரமான முன்னேற்றத்தை மக்களுக்கு எடுத்துக் கட்டி விளக்கவும், தொழில் வர்த்தகாட்சிகளும், வர்த்தகச் சந்தைகளும் பிரபலமாகி வருகின்றன.

    19-ம் நூற்றாண்டில் வர்த்தக சந்தைகள் கூட்டுறவுக்கும் நட்புக்கும் அடையாளமாக விளங்கின. முதல் வர்த்தக சந்தை லண்டனில் உள்ள ஹைட் பார்க்கில் 1851-ல் அமைக்கப்பட்டது. இதற்காக இரும்பாலும் கன்னடியாலும் ஆனா ‘கிறிஸ்டல் பேலஸ்’ கட்டப்பட்டது. 141 நாட்கள் நடைபெற்ற இந்த கண் காட்சியை 60 லட்சத்து 40 ஆயிரம் பேர் கண்டுகளித்தனர். இந்த பேலஸ் 1936-ல் ஏற்பட்ட தீ விபத்தில் அழிந்தது.

   முதல் சர்வதேச வர்த்தக கண்காட்சி 1853-ல் நியூயார்க் நகரில் நடந்தது. 23 நாடுகளில் இருந்து 5 ஆயிரம் வர்த்தகர்கள் இங்கு கடை விரித்தனர். ஆனால் இது வெற்றிகரமாக நடைபெறவில்லை.

   இதன்பின் 1876-ல் அமெரிக்க தனது சுதந்திர தின நூற்றாண்டு விழாவின் போது பென்சில்வேனியாவில் அடுத்த வர்த்தக சந்தையை அமைத்தது. அமெரிக்க நாட்டின் உற்பத்திப் பொருட்கள் அனைத்தும் இதில் இடம் பெற்றன. இந்த கண்காட்சியில் தான் கிரகாம்பேல் தனது புகழ்மிக்க கண்டுபிப்பான தொலைபேசியை செயல் விளக்கத்தோடு அறிமுகப்படுத்தினர்.

   இதற்கடுத்து வர்த்தக கண்காட்சிக்கென்றே 1939- 40-ல் அமெரிக்க நியூயார்க் நகரில் 1216 ஏக்கர் நிலப்பரப்பில் நிரந்தரமான வர்த்தகச் சந்தை அரங்கை கட்டியது. 1964-ல் இங்கு நடந்த மிகப்பெரிய சர்வதேச வர்த்தக கண்காட்சியை காண வந்தவர்கள் எண்ணிக்கை 5 கோடி பேர்.

No comments:

Post a Comment