Thursday 16 March 2017

குண்டு மனிதர்களின் நாடுகள்




      நவீன யுகத்தில் எல்லாமே இயந்திரமயமாகிவிட்ட நிலையில் மனித உழைப்புக்கு வேலையே இல்லாமல் போய்விட்டது. உணவில் முன்பு சிறு தானியங்கள் அதிகம் சேர்க்கப்பட்டன. அவை புரதத்தை தருபவை. அவற்றை சாப்பிடுவதால் உடலில் கொழுப்பு சேராது.



      ஆனால் பின்னாளில் மனிதனின் பிரதான உணவாக வந்த அரிசியில் புரதத்தைவிட கார்போஹைட்ரேட் மிக அதிகமாக இருந்தது. மனிதர்கள் ஓரளவு கொளுத்த உடல் அமைப்பு கொண்டவர்களாக மாறினார்கள். இப்போது பெரும்பாலான மனிதர்களின் உணவகாக துரித உணவு இருக்கிறது. இது மனிதனை மேலும் மாமிச மலையாக கொழுக்க வைத்துவிட்டது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இதே நிலைதான் உள்ளது.



    கொழுத்த சரீரம் உள்ளவர்களின் தலைநகரமாக கத்தார் (qatar) நாடுதான் முதல் இடத்தில் உள்ளது. பாரசீக வலைகுடவிற்குள் நாக்கு போல 16௦ கிலோ மீட்டர் நீளம் கொண்டிருக்கும் நாடு இது இங்கு ஏழரை லட்சம் மக்களே வாழ்கின்றனர். இந்த நாட்டின் பரப்பளவு வெறும் 11 ஆயிரத்து 437 சதுர கிலோமீட்டர்தான் பெட்ரோல் (Petrol) போதுமான அளவு தாரளமாக கிடைகின்றது.



    தேசிய வருவாயில் 9௦ சதவீதம் பெட்ரோலியம் மூலமே கிடைக்கிறது. மக்கள் செல்வச்செழிப்பில் மிதக்கின்றனர். சுகபோக வாழ்க்கை வாழ்கின்றனர். உடற்பயிற்சி செய்ய சோம்பல அடைந்து, எப்போதும் துரித உணவுகளை உள்ளே தள்ளிக் கொண்டு இருக்கின்றனர். விளைவு, மக்கள் தொகையில் பாதிக்கு மேல் குண்டு மனிதர்கள் தான் உள்ளனர்.



   இதனால், நோய்களுக்கும் பஞ்சமில்லை. 16 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களில் 17 சதவீதம் பேர் பாதிக்கபட்டுள்ளனர். இங்கு உள்ள சர்க்கரை நோய் ஆய்வு நிலையம் எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. ‘நாட்டின் முக்கிய பிரச்சினையாக மக்களின் ஆரோக்கியம் மாறி வருகிறது. குண்டு உடலை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த மையம் கருத்து தெரிவித்திருக்கிறது.





     இப்போதைக்கு குண்டு மனிதர்களின் கோட்டையாக கத்தார் உள்ளது. மேற்கத்திய நாடுகளிலும், சீனா போன்றவற்றிலும் குண்டு மனிதர்கள் குறைவின்றி உள்ளனர். அவர்களுடன் இந்தியாவும் போட்டியில் உள்ளதுதான் முக்கியமான விஷயம். வசதிகளும், வாய்ப்புகளும் உள்ளவர்கள் எந்த நோயையும் எதிர்கொண்டு சமாளித்துக் கொள்வார்கள். ஏழை நாடான இந்தியாவில் குண்டுமனிதர்கள் அதிகரிப்பது ஆரோக்கியமான விஷயம் இல்லை. தற்பொழுது உடல் எடையை குறைக்க உடல் உழைப்பை அதிகரிப்பதே அவசியமான ஓன்று.


No comments:

Post a Comment