Wednesday 15 March 2017

சோம்பேரிகாக வாழைபழ தோல் உரைக்கும் கருவி


        அளவுக்கு அதிகமாக சோமபல்படுபவர்களை 'வாழைபழச் சோம்பேறி' என்பார்கள். அதாவது, வாலைப் பழத் தோலை உரைக்கக் கூட சோம்பல் படுவார்களாம். அம்மாதிரி ஆசாமிகளுக்காகவே தற்போது, வாழைப்பழத் தோலை உரித்துத் தரும் கருவியை அமெரிக்காவில் தயாரித்திருக்கிறார்கள். இது மட்டுமல்ல, சோம்பல் பேர்வழிகளை உடல் அலுங்காமல் வைத்திருக்கும் மேலும் பல சாதனங்கள் அமெரிக்க சந்தைகளுக்கு வந்திருக்கின்றன.

        உதாரணமாக, தானே டீயைகலக்கிக்கொள்ளும் கோப்பை, குளிர்பானத்தைத் தானே ஊற்றித் தரும் பிரிட்ஜ், நடக்கும்போது தானே தரையைத் துடைக்கும் காலணி. ஏன், காலுறைகளை (சாக்ஸ்) உருவிப் போடும் சாதனம் கூட உண்டு.

        சல்மான்கான் போல 'சிக்ஸ் பேக்' அடையும் ஆசை பலருக்கும் உண்டு. ஆனால் அதிகாலையில் எழுந்து ஜிம்முக்கு செல்ல சோம்பல், படுக்கையில் சுகமாகச் சுருண்டுகொள்வார்கள். அவர்களுக்காகவே, மெல்லிய உலோகத்தாலான, உடம்பை இறுக்கி பிடிக்கும் பட்டையும் உண்டு. இதை அணிந்துகொண்டால் சிக்ஸ் பேக் போலவே தோற்றமளிக்கும்.

       ஐஸ்கிரீம் பிரியர்களுக்காக, ஐஸ் உருகி வழிவதைத் தடுக்கும் வகையில் அமைந்த சுழலும் மெக்கானிக்கல் கோன் கூட உண்டு. சிறிய டீ பேகை வெந்நீரில் முக்கித் தரும் சாதனமும் விற்பனைக்கு வந்திருக்கிறது.

       சிலர் புத்தகத்தைக் கையில் வைத்துப் படிக்கக்கூட கஷ்டப்படுவார்கள். அத்தகைய நபரிகளுக்காக, புத்தகத்தை வசதியான கோணத்தில் பிடித்திருக்கும் நாற்காலியைத் தயாரித்திருக்கிறார்கள். அதேபோல தானே விரிந்து கொள்ளும் மெத்தையும் தயாராக இருக்கிறது.

       ஏற்கனவே, நவீன சாதனங்கள் மனிதர்களின் உடல் உழைப்பைக் குறைத்துவிட்டன, அதன் காரணமாக பல உடல் உபாதைகள் ஏற்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறன. இந்நிலையில், புதிய சோம்பல் சாதனங்களும் வந்தால் ரொம்ப ரொம்ப நல்லாயிருக்கும்.

No comments:

Post a Comment