Monday 13 March 2017

ஆதிகால சினிமா

         ஆரம்ப காலத்தில் சினிமா பார்க்க தியேட்டர்கள் எதுவும் கிடையாது. ஒரு ரீல் அளவே கொண்ட துண்டுப்படங்களே அன்று சினிமாவாக காட்டப்பட்டன. நடமாடும் திரைகளும், பெரிய கடைகளின் வாசல்களிலும் திரைப்படங்கள் காட்டப்பட்டன.
         1903-ம் ஆண்டு டிசம்பரில் தி கிரேட் டிரெயின் ராபரி என்ற மவுனப்படம் வெளியானது. பல புதுமைகளை கொண்டிருந்த இந்த படம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் காரணமா நிகோலடியன்கள் என்ற நவீன திரையரங்குகள் புற்றீசல் போல தோன்ற தொடங்கின.
        இந்த படம் வெளியானபோது அமெரிக்காவில் வெறும் 8 நிகோலடியன்கள் மட்டுமே இருந்தன. ஆனால் அடுத்த 5 ஆண்டுகளில் இதன் எண்ணிக்கை 10 ஆயிரமாக பெருகியது. இந்த திரையரங்குகளில் ஒரு நபருக்கு 5 முதல் 10 சென்ட்கள் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது. பார்வையாளர்களின் தரத்திற்கு ஏற்ப குஷன் இருக்கைகளும் பியானோ கருவிகளும் அரங்கத்தினுள் பயன்படுத்தப்பட்டன.
         சினிமா மிகப்பெரிய வசீகரம் கொண்டு மக்களை சுண்டி இழுத்தது. திரையில் பிரமாண்டமான செட்டுகளுடன் கூடிய பிரமிப்பூட்டும் படங்களை பார்க்கும்போது தாங்கள் அமர்ந்திருக்கும் திரையரங்கமும் ராஜ வசதிகளுடன் இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்பத் தொடங்கினர்.
        இதன் காரணமாக நிகோலடியன்கள் என்ற அரங்கில் இருந்து அமேரிக்கா புதிதாக தியேட்டர் என்ற கலாசாரத்திற்கு மாறத் தொடங்கியது. சாதரான மரக்கட்டை நாற்காலிகளுக்கு பதிலாக சோபா செட்டுகள் தியேட்டரின் பின்வரிசையை ஆக்கிரமித்தன. வசதி மிக்கவர்கள் பின்வரிசைக்கு போனார்கள்.
         மிட்ச்செட் எல் மார்க் என்பவர் 1914ம் ஆண்டு மன்ஹாட்டனில் பிராட்வே என்ற பெயரில் 3,300 பேர் அமரக்கூடிய பிரமாண்டமான தியேட்டரை நிறுவினார். இரண்டடுக்கு மாடிகளாக அமைக்கப்பட்ட இந்த தியேட்டர்களில் தரை பளிங்கு கற்களால் இழைக்கப்பட்டது. அதன்மேல் உயர் ரக கார்ப்பெட்டுகள் விரிக்கப்பட்டன. புதிதாக உருவான இந்த தியேட்டர் மக்களின் கனவு பிரதேசமாக பார்க்கப்பட்டது.
         இதுபோன்ற நவீன தியேட்டர்கள் ஏராளமாக உருவாகின. இவற்றில் 25 சென்ட் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டது தியேட்டர்கள் வரவு காரணமாக படிப்படியாக நிகோலடியன்கள் முழுவதுமாக மூடப்பட்டன.
         காலச் சக்கரம் மீண்டும் சுற்றியதில், நமது நாட்டிலும் கூட தற்போது தியேட்டர்கள் பணக்கார்கள் மட்டுமே வரக்கூடிய இடமாக மாறி வருவது மறுக்க முடியாத உண்மை.

No comments:

Post a Comment