மனித மூளையின் சிறப்பு பற்றி ஆரம்ப காலத்தில் அறியப்படவில்லை. மனித உடலில் சதைப்பிண்டமாகவே மூளை கருதப்பட்டது. அதனால் உடலுக்கு எந்த விதமான உபயோகமும் இல்லை என்று டாக்டர்கள் தவறுதலாக நம்பி வந்தனர்.
அந்தநாளில் மருத்துவத்தில் மிகவும் பிரபலமாக இருந்தவர்கள் சீனர்கள். அவர்களும்கூட மூளையை பற்றி அறிந்திருக்கவில்லை. அந்த அளவுக்கு மூளை கண்டு கொள்ளப்படமாலேயே இருந்தது. மூளையைப் பற்றி முதன் முதலில் சிந்தித்தவர்கள் கிரேக்க மருத்துவர்கள் தான் BRAIN என்கின்ற ஆங்கில வார்த்தை பிரென் என்ற கிரேக்க வார்த்தையில் இருந்து வந்தது. பிரென் என்பதற்கும் தேவையற்ற சதைபிண்டம் என்று அர்த்தம்.
முதன் முதலில் மூளைக்கு கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்தவர் கேலன் என்ற கிரேக்க அறிஞர் தான். இவர் நாம் உள்ளை இழுக்கும் மூச்சு மூளைக்கு போய் உயர் சக்தியாக மாறி இதயத்துக்கு வருகிறது என்றார். இது தவறான கருத்துதான் என்றாலும் கூட மூளையின் முக்கியத்துவம் குறித்து முதன் முதலில் வெளியிட்ட ஒரு ஆக்கப்பூர்வமான கருத்து.
அன்றைய காலகட்டத்தில் பிணத்தை அறுத்து ஆராய்ச்சி செய்வது முடியாத காரியம். பிணத்தை அறுப்பதற்கு மத தலைவர்கள் தடை போட்டிருந்தார்கள். அன்று மதத்தலைவர்களை மீறி எதுவும் செய்ய முடியாத நிலை இருந்தது. மீறினால் தண்டனை என்று இருந்தது. இதனால் மனித உடலை பற்றி முழுமையாக அறிந்துகொள்ள முடியாத நிலை இருந்தது.
கி.பி.6ம் நூற்றாண்டில் இருந்து 8-ம் நூற்றாண்டு வரை மூளையை பற்றிய ஆராய்ச்சிகள் அதிகமாயின. மூளையை பற்றி நமக்கு நன்றாக தெரிய காரணம் 2 திருடர்கள் தான். எடின்பரோ நகரில் பர்க், ஹாரே என்று 2 திருடர்கள் இருந்தனர். சின்னசின்ன திருட்டுகளை செய்துவந்த அவர்களுக்கு திருட்டு தொழில் லாபகரமாக இல்லை. அப்போது அவர்களுக்கு ஒரு யோசனை வந்தது. மனித உடலை அருத்துப்பார்க்க தடை இருந்ததால் டாக்டர்களுக்கு பிணங்களை திருடி அனுப்புவது என்று முடிவு எடுத்தார்கள். இதற்கு பலனும் கிடைத்தது. வெறும் பிணத்தை மட்டும் தராமல் இறந்தவனுக்கு என்னென்ன வியாதிகள் இருந்தன என்பதையும் கண்டறிந்து டாக்டரிடம் தெரிவித்தனர். இது ஆராய்ச்சிகளுக்கு மிகவும் உதவியாக இருந்தது. ஒவ்வொரு நோய்க்கும் உடலில் எந்தமாதிரியான பாதிப்பு இருக்கும் என்று தெரிந்து கொள்ள உதவியது.
ஒருமுறை இடது கையில் முடக்குவாதம் வந்து இறந்துபோன ஒருவரின் பிணத்தை அந்த திருடர்கள் கொண்டுவந்து கொடுத்தனர். அந்த பிணத்தின் மண்டை ஓட்டை பிளந்து பார்த்தபோது மூளையின் வலது பக்கம் பாதிக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.
மூளைக்கும் மனித உடலின் இயக்கத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என சிந்திக்கத் தொடங்கினர். மூளையை பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்தன. படிப்படியாக மூளையை பற்றிய வியப்பான உண்மைகள் வெளிவர தொடங்கின.
No comments:
Post a Comment