Sunday 19 March 2017

கொலையுடன் நடந்த இதய கண்டுபிடிப்பு




       இதயம் இடைவிடாது இயங்கும் ஒரு கருவி. மனித இதயம் எப்படி இருக்கும் என்று எல்லோரும் பல யூகங்களை வெளியிட்டுக் கொண்டிருந்த வேலையில் இதயத்தின் நிஜ வடிவம் இதுதான் என்று தத்ரூபமாக படம் வரைந்து காட்டியவர் “மோனலிசா” ஓவியத்தை வரைந்த லியானார்டோ டாவின்சி தான்.
      உடற்கூறுகளை தன் படைப்புகளில் உயிரோட்டமாக வரவேண்டும் என்பதற்காக இறந்தவர்களின் உடலை அறுத்து ஆய்வு செய்யவும் அவர் தயங்கவில்லை. அப்படிப்பட்ட ஓர் ஆய்வில்தான் இதயத்தின் நிஜ வடிவத்தை பார்த்திருக்கிறார்.
      இதயம் பற்றி அடுத்து சொன்னவர் ஸ்பெயின் நாட்டு டாக்டர் மிக்கேல் செர்வீட்டஸ் என்பவர். இவர் இதயத்தின் ஒரு பக்கத்திலிருந்து நுரையீரல் வழியாகத்தான் ரத்தம் மறுபக்கத்தை அடைகிறது என்றும், நுரைஈரளில்தான் அது காற்றுடன் கலந்து செந்நிறம் அடைகிறது மற்றும் உயிர்சத்தும் பெறுகிறது என்றம் சொன்னார்.
  இது மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பியது, அந்த காலத்தில் விஞ்ஞானத்தையும் தனது ஆதிகத்தின் கீழ் கொண்டிருந்த கிறிஸ்தவ தேவாலய குழுக்கள் செர்விட்டசின் கருத்தை ஏற்கவில்லை. மிரட்டல், எச்சரிக்கை எதுவும் செய்யாமல் கி.பி.1553-ல் உயரோடு அவர் கொளுத்தப்பட்டார். இந்த படுகொலைக்கு அடுத்து 75 ஆண்டுகள் இதயத்தைப் பற்றி யாரும் வாய் திறக்கவில்லை.
        வில்லியம் ஹார்வி என்ற தலை சிறந்த டாக்டர் தான் இதயம் என்பது ரத்த விசை அழுத்த எந்திரம். ரத்தம் எப்போதும் ஒரே திசையில் செல்கிறது. உடலில் ஒரும் ரத்தத்தின் அளவு மாறாத நிலையான அளவு கொண்டது என்றும் கூறினார். நுரையீரல் ரத்த ஓட்டம், உடலமைப்பு முழுவதும் ஒடும் ரத்த ஓட்டம் என்று அனைத்தையும் கூறியது ஹார்விதான். இதயத்தின் இயக்க விசையால் தான் ரத்தம் உடல் முழுவதும் நிக்காமல் ஓடிகொண்டிருக்கிறது. ரத்த ஓட்டம் பற்றி இவ்வளவு சொன்னதால்தான் வில்லியம் ஹார்வியை இதயத் துரையின் தந்தை என்று கூறுகிறார்கள்.
         இதயத்தின் எடை ஆண்களுக்கு சுமாராக 325ல் இருந்து 400 கிராம் வரை இருக்கும். பெண்களுக்கு 275ல் இருந்து 350 கிராம் வரை இருக்கும். மனிதனால் உருவாக்கப்பட்ட எந்த எந்திர பாம்பும் இதயத்தின் முன் நிற்க முடியாது. பெரிய தொழிற்சாலைகளில் கூட தொடர்ந்து இயங்கும் எந்திரத்தை ஓரிறு நாட்கள் ஒய்வு கொடுத்து பராமரிப்பார்கள். ஆனால் இறைவனின் படைப்பான இந்த இதய பாம்புக்கு ஒரு விநாடி கூட ஒய்வு இல்லை.
       கரு உருவான 4-வது வாரத்தில் தொடங்கும் இந்த இதய பாம்பின் இயக்கம், நம் உயிர் உள்ளவரை தொடர்ந்து கொண்டே இருக்கும். ஒரு நிமிடத்திருக்கு 72 முறை சுருங்கி விரிகிறது. சுருங்குவதற்கு 0.3 வினாடிகளும், விரிவதற்கு 0.5 வினாடிகளும் எடுத்துக்கொள்கிறது. ஆக ஒரு முறை இதயம் சுருங்கி விரிய 0.8 வினாடி ஆகிறது. இதயம் ஒருமுறை பம்ப் செய்யும் ரத்தத்தின் அளவை “ஸ்ட்ரோக் வால்யூம்” என்பார்கள். அதன் அளவு 70 மில்லி லிட்டர் ஆகும். ஒரு நிமிடத்துக்கு சுமார் 5 லிட்டர் ரத்தத்தை டளுகுள் பம்ப் செய்கிறது. நமது உடலில் உள்ள ரத்தத்தின் அளவு சுமார் 5 லிட்டர். இதுவே திரும்பத் திரும்ப பம்ப் செய்யபடுகிறது.

No comments:

Post a Comment