Friday 24 March 2017

கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் ஏன் ஆலமரத்தை சுற்ற வேண்டும்



     கோயில் தரிசனம் மேற்கொள்பவர்கள் கண்டிப்பாக ஆல மரத்தையும் வலம் வர வேண்டும் என்று கூறுவதில் ஓர் சாஸ்திரம் அடங்கியுள்ளது.

    பஞ்சாமிருதத்தின் நன்மைகள் தேவ விருட்சமாக ஆலமரத்தைச் சுற்றி வரும் போது கிடைக்கப் பெறும் என்று ஆசாரியர்கள் கூறியுள்ளனர்.

    ஒன்றாவதாக விஸ்வம் முழுதும் நிரம்பி நிற்கும் ஸ்ரீ பரமேஸ்வரனின் நினைவு நமக்குள் நிறையும். மிகப் பயன்தரும் ஓர் உடற்பயிற்சியாக ஆலமரத்தைச் சுற்றுவதை நாம் கருதலாம், என்பது இரண்டாவது பலன். நமது உடலுக்குத் தேவையான வாயுவும், ஒளியும் வலம் வரும் போது நாம் பெறுகின்றோம். ஆலமரத்திலிருந்து மிகுதியான பிராணவாயு (ஆக்சிஜன்) சுற்றி வலம் வரும் பக்தர்கள் சுவாசிக்கலாம். கடைசியாக ஆலமரத்தின் நிழல், சுற்றி வரும் பக்தருக்கு குளிமை அளிக்கின்றது. ஆலமரத்தை வலம்வரும் போது பஞ்சாமிருத்தின் நற்குணங்களை அடையலாம் என்பது கண்டறிந்துள்ளனர்.

   ஆலமரம் வாயுவிலிருந்து கார்பனை உட்கொண்டு, ஆக்சிஜனை வெளிவிடுகின்றது. எல்லா தாவரங்களும் இவ்வாறே செய்கின்றன என்றாலும் ஆலமரத்தின் சிறுதண்டுகளும் இலைகளும் இருக்கும் அமைப்பின் விளைவாக 24 மணி நேரமும் வாயுவை வெளியிட்டு கொண்டிருக்கின்றன. ஆதலால் மிக அதிகம் ஆக்சிஜன் வெளியே விட ஆலமரத்துக்கு இயல்கின்றது. மேலும் சிறிதளவாவது ஓசோன் உற்பத்தி செய்யும் சக்தி பெற்றிருக்கிறது ஆலமரம். இது வாயுவை விட பொருள் அடர்த்தியுடையதனால் ஆலமரத்தின் கீழே தங்கி நிற்கின்றது. இது வாயுவை சுத்தம் செய்து சுவாச பாதையிலுள்ள அணுக்களை அழிகின்றது.

     இதனால் நம்முன்னோர்கள் ஆலமரம் வலம்வருவதை கட்டாயமாக்கி இந்து மத சாஸ்திர ரகசியங்களை கோவில்களிலும் பணித்துள்ளனர்.

No comments:

Post a Comment