Thursday 23 March 2017

திருமணமான பெண்கள் ஏன் நெற்றிக்கு மேல் குங்குமம் அணிய வேண்டும்


     திருமணமான பெண்கள் குங்குமம் அணிய வேண்டும் என்று, எழுதிவைக்கப் படாத ஒரு சட்டம். நவீனப் பெண்களும் கடை பிடித்து வருகின்றனர்.

     சீமந்தக் கோடில் குங்குமம் இடுவதை முன்னோர்கள் மிக கெளரவமான ஒன்றாகவே கருதியிருந்தனர். திருமணத்துக்குப்பின் முதல் கர்ப்பம் தரித்து நானகாவது மாதம் சீமந்தம் அல்லது குங்குமம் அணிதலின் சடங்கு ஆசரித்து வந்தனர். திருமணமானால் பெரும்பான்மையான பெண்களும் தலைமுடியை வகுந்து அதற்கு நடுவிலுள்ள சீமந்த ரேகையில் குங்குமம் அணிந்து வருகின்றனர். வட இந்தியாவில் இது சம்பந்தமான ஒரு சட்ட திட்டமே செயலாற்றி வருகின்றனர்.

   சில இடங்களில் கர்ப்பவதியான பின் இச்சட்டங்களைக் கொண்டாடுகின்றனர். தான் திருமணமானவள் என்றும் அதனால் பிற ஆண்கள் தன மேல் ஆசைவைக்க வேண்டாமென்று வெளிப்படுத்துமாறு இதை அணிகின்றனர் என்று கேலி செய்பரும் உண்டு. நம்முடைய சாஸ்திரத்தில் இதற்கு மிக ஆழமான பொருள் கற்பித்துள்ளனர். ஆசாரியவிதிப்படி, தலை முடியை பகுத்து வைப்பது பெண்மையின் சின்னம் என்று கருதுகின்றனர். அதில் சிவப்புக் குங்குமம் இடுவது தன் கன்னித்தன்மை ஒருவரால் அலிக்கப்பட்டது என்று வெளிப் படுத்துவதற்காகவே கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment