Tuesday 21 March 2017

அமெரிக்காவின் தங்க மலை பற்றிய ரகசியம்.


     இந்த உலகில் விவரிக்க முடியாத சம்பங்கள் பல இருக்கின்றன. அதேபோல் இன்னும் சில சம்பவங்கள் மூடநம்பிக்கையின் காரணமாக நடப்பதாக கருதப்படும் மாயையாகவும் உள்ளன. இவை இரண்டுக்கும் பொதுவாக இன்றுவரை தனது மர்மத்தையும் மூடநம்பிக்கையையும் தனக்குள் வைத்திருக்கும் ஒரு மலைதான் அமெரிக்காவில் உள்ள SUPER STATION MOUNTAIN எனப்படும் மூடநம்பிக்கைகளின் மலை.
    அமெரிக்காவின் அரிசோனா பகுதியில் இருக்கும் ஒரு மழை தொடர்தான் இது. அதை சுற்றி நிகழும் சம்பவங்களும், நம்பிக்கைகளும், காரணங்களும் காலத்தால் நம்பமுடியாதபடி உள்ளன. 1800-ம் ஆண்டுகளில் ஜேகப் வால்ஸ் என்பர் இந்த மழை தொடரை முதல்முதலாக கண்டுபிடித்தார். அந்த மலையில் மிகப்பெரிய தங்கப்புதையல் கொண்ட சுரங்கம் இருப்பதை அறிந்தார். இருந்தாலும் அதைபற்றி யாருக்கும் அவர் தெரிவிக்கவில்லை. கடைசி காலத்தில் நோயின் தாக்கத்தால் மரணபடுக்கையில் இருந்தார் அவர்.
    அந்த நிலையில் அவர் தனக்கு நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் தங்கமலை பற்றிய ரகசியத்தை கூறினார். பின்னர் அந்த சிலரில் ஒருவரால் கொல்லப்பட்டார். இதனால் அந்த புதையல் இருக்கும் சரியான இடம் யாருக்கும் தெரியவில்லை. ஜேகப் வால்ஸ் இறப்புக்கு பிறகு புதையல் இருக்கும் கதை அதை சுற்றி இருக்கும் பகுதிகளில் பரவியது. இதனால் எல்லோரும் கூட்டம் கூட்டமாக புதையலை தேடி சென்றனர்.
     அந்த மலைக்கு சென்றவர்களில் பலர் திரும்பி வரவில்லை. சிலர் மர்மான முறையில் இறந்து போனார்கள். திரும்பி வந்தவர்களும் தங்கத்தை காணவில்லை. முன்பு சென்றவர்களின் எலும்பு கூடுகளை ஆங்காங்கே கண்டு அதை சொல்லி திகிலை கிளப்பினார்கள். தப்பிவந்தவர்களில் பலர் இந்த மலையில் குள்ள மனிதர்கள் வாழ்வதாகவும். அவர்களே அந்த புதையலை பாதுகாப்பதாவும் கூறினார்கள். அந்த மலைத்தொடர்களின் இடுக்கில் தான் நரகத்திற்கான நுழைவாசல் இருக்கிறது என்றும் அந்த பகுதில் வாழும் மதகுருக்களும் ஒரு கதையும் கூறுகிறார்கள்.
     அந்த மலைத்தொடர் பிரதேசம் முழுவதும் கடும் வெப்பம் வீசும். பாலைவனம் போல அப்பகுதி காட்சி அளிக்கும். அங்கு நீர் நிலைகள் இல்லை. அங்கு மழை பெய்தாலும், மழை பெய்த குறுகிய நேரத்தில் நீர் வற்றிவிடும். மலைத்தொடர் பல்வேறு ஏற்ற இறக்கங்களையும் கொண்டது. இப்படி இருக்கும் குறுகிய மலை இடுக்குகளில் சிக்கியும் நீரின்றியும் பலர் இறந்திருப்பார்கள் என்றும் சொல்கிறார்கள்.
     இருந்தாலும் அந்த பகுதி மக்கள் தங்க புதையலை குறிவைத்து தேடுதல் வேட்டை நடத்தி கொடுத்தான் இருக்கிறார்கள். அதில் பலர் இன்னும் திரும்பவில்லை என்பது உண்மை மட்டுமல்ல மர்மமாகவும் உள்ளது.

No comments:

Post a Comment