Thursday 23 March 2017

கோவிலுக்குள் செருப்பணிதல் தடை ஏன் அறிவியல் உண்மை


      புன்னியகருமங்கள் எல்லாமே காலணி இல்லாமல் செய்ய வேண்டும் என்று கூறுவதுண்டு என்றாலும் கோயிலில் நுழையும் போது காலணி ஆகாது என்பது கட்டாயம் ஆக்கபட்டது. சில கோயில்களில் சட்டை அணிவது கூட தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் எல்லாக் கோயில்களிலும் செருப்பணிவது கட்டாயமாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடை காரணமாக சிலர் அவசர காலங்களில் கோயிலுக்கு வெளியில் நின்று வணங்கி விட்டுச் செல்வதையும் நாம் காண்கிறோம்.

     கோயில் சுவர்களுக்குட்பட்ட இடங்கள் அனைத்தும் தெய்வ பூமி என்பதே இந்து மத நம்பிக்கை. இறைவன் வேறெங்கும் நிலைகொள்ளவில்லை என்று இதற்கு அர்த்தம் கொள்ள வேண்டாம். செருப்பை களைந்து கோயிலுக்குள் நுழையும் பக்தரின் பாதங்கள் இயல்பாகவே காந்த சக்தியுடைய தரையில் பதிகின்றன. மனிதனின் உடல் நலத்துக்கு உத்தமமானது எனக் கண்டறிந்துள்ள பூமியின் காந்த சக்தியின் ஒழுக்கு, பாதம் தரையில் பதியும் பொது உடலுக்குள் செலுத்தப்படுகின்றது. அதுமட்டுமல்ல மூலிகைகளுடைய மலர்களும் இலைகளும் கலந்த தண்ணீர் விழுந்த பூமியானதால் கோயில் சுற்றுமுள்ள மண்ணுக்கு மருத்துவ குணங்களும் இருக்கலாம்.

    இவையெல்லாம் மனதில் கொண்டு கர்வத்தையும் காலணியையும் களைந்து இறைவனை தரிசனம் செய்ய நவீன சாஸ்திரம் பணிகின்றது மற்றும் இதன்மூலம் 'மாக்னடிக் தெரபி' அல்லது காந்த சிகிட்சை நம்முள் நடக்கிறது.

No comments:

Post a Comment