Wednesday 29 March 2017

ஏன் விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கபடுகின்றன


    மக்கள் நலன் கருதி அறிவியல் பின்னணியாக கொண்டு நம் முன்னோர்கள் செய்த காரியங்கள் எல்லாம் என்று குருட்டுதனமாக பின்பற்ற பட்டு வருகிறது. கோவில்களில் இருந்து கும்பாபிஷேகம் வரை அனைத்திலும் ஏதோ ஒரு உள்நோக்கத்துடன் தான் நம் முன்னோர்கள் செய்து வைத்திருகிறார்கள். ஊர் நடுவில் இருக்கும் கோவிலின் கலசங்கள் இடிதாங்கியாக பலனளித்துள்ளது. கலசமும் தானியங்களும்தான் இந்த நலனை அளித்துள்ளன.
    இவற்றின் சக்தி 10-ல் இருந்து 12 ஆண்டுகளில் அவற்றின் சக்தி இழந்துவிடும். அதனால்தான் இந்த இடைப்பட்ட காலத்தில் கும்பாபிஷேகம் என்ற பெயரில் அவற்றை மாற்றி வந்துள்ளனர். அதேபோல்தான் விநாயகர் சிலைகளை ஆற்றில் கறைப்பதும். ஆற்றில் நீர் தங்க வேண்டும் என்றும் நிலத்தடிநீர் ஆதாரம் பெருகவேண்டும் என்பதற்காக செய்யும் செயல்தான் இது.
     ஆடிபெருக்கில் வெள்ளம் வந்து ஆற்றில் உள்ள மணலை  கரைத்து கொண்டு போய்விடும். அதனால் அவ்விடத்தில் நீர் நிலத்தில் தங்காமல் கடலில் சேர்ந்துவிடும். அதனால் தான் ஆடிமாதம் முடிந்த பின் ஆவணி மாதம் ஆவணி சதுர்த்தியை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. அதனால் தான் விநாயகர் சிலையை களிமண்ணால் செய்து அவற்றை ஆற்றில் கரைத்து வந்திருகின்றனர்.
     ஆனால் ஏன் 3 அல்லது 4 நாட்கள் கழித்து ஆற்றில் கரைக்க வேண்டும் என்றால் ஈரமான களிமண் சீக்கிரம் கரைந்து ஆற்றில் வெள்ளத்தோடு அடித்து செல்லப்படும். சற்று காய்ந்த களிமண் அதே இடத்தில் படிந்து தங்கி விடும். இதனால் ஆற்றில் வரும் நீரானது பூமியின் நிலத்தடி நீரை அதிகரிக்கும். இதனால் தான் நம் முன்னோர்கள் விநாயகர் சிலைகளை ஆற்றில் மட்டும் கரைத்து வந்துள்ளனர்.
     ஆனால் இன்று ஏன் எதற்கு என்று தெரியாமல் கடலில் வீணாய் கரைத்து வருகின்றனர். இப்பொழுது தயாரிக்கும் விநாயகர் சிலையானது ரசாயனம் கலந்த சாயங்கள் மற்றும் வண்ணங்கள் கலந்து தயாரிக்கபடுகிறது. இந்த மாதிரியான சிலைகளை ஆற்றில் கரைபதினால் நீர்தான் மாசுபடுகிறது. மக்களின் நன்மைக்காக உருவாக்கப்பட்ட இந்த காரியத்தை இப்பொழுது அந்த மக்களுக்கே தீங்காக அமைந்துவிட்டது.

No comments:

Post a Comment