Monday 3 April 2017

காசுகளை ஏன் நீரில் போட்டனர்



   நம்மில் பலர் கோவிலில் அமைந்துள்ள குளத்தில் காசுகளை தூக்கி போடுவதை வழக்கமாக வைத்துள்ளோம். அப்படி செய்தால் அதிர்ஷ்டம் வரும் என்று கூறுவார்கள். அதிர்ஷ்டம் வருமோ, வராதோ என்பது ஒரு பக்கம் இருக்கடும். இதற்கு பின்னால் ஒரு மிகப்பெரிய அறிவியல் உண்மை உள்ளதை நாம் கவனிக்க வேண்டும்.

   கோவில் குளங்களிலும் ஆறுகளிலும் காசு போடும் பழக்கமானது ஒரு சில வருடங்களுக்கு முன்னாள் வந்த பழக்கம் அல்ல பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நம் கலாச்சாரத்தில் ஊறிவந்த பழக்கம் இது. அந்த காலத்தில் காசுகளை செம்பு என்ற உலோகத்தில் செய்தனர். அப்படி செய்யப்பட்ட காசுகளை தான் நீரில் தூக்கிப்போட்டனர். இப்படி செய்வதால் செம்புகாசுகளில் இருக்கும் அணுக்கலானது நீருடன் கலக்கும். அந்த நீரைத்தான் மக்களும் அருந்தினர். இன்று போல் இல்லாமல் மக்கள் ஆற்று நீரை தான் அருந்தினார்கள். என்பது நாம் அறிந்த உண்மை.

   இப்படி அருந்துவதன் மூலம் அவர்களின் உடலில் செம்பு தாதுகள் அதிகமாக சேருவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தது. இந்த செம்பு தாது என்பது உடம்புக்கு மிகவும் தேவையான ஓன்று. இது குறைந்தால் மூட்டு வழி, ரத்த சோகை போன்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இப்படி பட்ட அறிவியலை மக்களிடம் சொன்னால் மக்கள் ஏற்கமாட்டார்கள் என்பதற்காக நம் முன்னோர்கள்  மக்களிடம் ஆற்றில் காசுகளை போட்டால் அதிர்ஷ்டம் வரும் என்று கூறி காசுகளை ஆற்றில் போட வைத்தனர்.

   ஆனால் நாம் இன்று என்ன செய்கிறோம் என்று பார்த்தால் மினரல் வாட்டர் என்ற சத்தற்ற நீரை குடித்து விட்டு STAINLESS STEEL என்ற உலோகத்தால் செய்த காசுகளை கோவில் குளங்களில் போட்டு விட்டு அதிர்ஷ்டத்தை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறோம். இன்றைய காலத்தில் ஆற்றுக்கு சென்று நீரை கொண்டு வருவதெல்லாம் சென்னை போன்ற பெருநகரங்களில் எல்லாம் சாத்தியமற்றது. ஆனால் நம் நிலத்தடி நீரை செம்பு குடத்தில் ஊற்றி நாம் அருந்தினால் கண்டிப்பாக நமக்கு அது நன்மை அளிக்கும். அதுதான் நம் முன்னோர்களும் நமக்கு கூறிய பாடம்.

No comments:

Post a Comment