Sunday 9 July 2017

ARTIFICIAL INTELLIGENCE வருகை, மனித இனத்திற்கு அழிவு ?

 
    சமீப ஆண்டுகளாகவே GOOLE, FACE BOOK, IBM பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்காக மனிதர்களை போலவே சிந்திக்கும் திறன் கொண்ட ARTIFICIAL INTELLIGENCE என்கின்ற ஒரு ப்ரோக்ராம் தயாரித்து வருகின்றனர். இது ஒருவகையில் நன்மையாக பார்க்கப்பட்டாலும், மற்றொரு வகையில் தீமையானதாகவும் பார்க்கப்படுகிறது.
 
    ஏன் என்றால் இந்த ARTIFICIAL INTELLIGNECE ப்ரோக்ராம் நல்லது மாதிரி தெரிந்தாலும், போக போக பல இடையூறுகளும், விபரீதங்களுக்கும் காரணமாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ARTIFICIAL INTELLIGENCE -யை ஒரு கட்டத்துக்கு மேல் போக விடக் கூடாது என்றும். அப்படி போகும் பட்சத்தில் அது மனித இனத்துக்கே ஆபத்தாக முடிய வாய்ப்பு இருப்பதாக, உலகின் மிக சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான ELON MUSK மற்றும் பலர் இந்த ARTIFICIAL INTELLIGENCE க்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்த எதிர்ப்புக்கு வலு சேர்க்கும் விதமாக, சமீபத்தில் FACEBOOK கின் ARTIFICIAL INTELLIGENCE ப்ரோக்ராமில் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. FACEBOOK கால் உருவாக்கி வருகிற ARTIFICIAL INTELLIGENCE மூலமாக, சமீபத்தில் FACEBOOK பயனாளர்களிடம் CHAT செய்வதற்காக CHAT BOX என்ற ஒரு புதிய ப்ரோக்ராம் உருவாக்கினார்கள். மனிதர்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு முன்னாள் CHAT BOX க்கு உள்ளேயே தொடர்பை ஏற்படுத்தி உரையாட வைத்துள்ளனர்.

    இந்த நிகழ்வின் போது தங்களுக்குள்ளாகவே ஒரு புதிய மொழியை உருவாக்கி தொடர்பு கொள்ள ஆரம்பித்தது. இதை கண்ட இந்த ப்ரோக்ராமை உருவாக்கியவர்களுக்கு பிரமிப்பில் ஆழ்ந்தனர். இந்த மாதிரியான ஒரு நிகழ்வு நடப்பது இது தான் முதல் முறை. இதை உடனடியாக சரி செய்த நிபுணர்கள். தங்களால் புரிந்து கொள்ளும் மொழிகளை மட்டும் பயன்படுத்தும் விதமாக மாற்றி அமைத்தனர்.

    இந்த ஒரு நிகழ்வு ARTIFICIAL INTELLIGENCE க்கு ஒரு ஆரம்ப புள்ளியாகத்தான். ஏனென்றால் ARTIFICIAL INTELLIGENCE உருவாக்கப்பட்டு வரும் நிலையிலேயே இந்த மாதிரியான சின்ன சின்ன நிகழ்வுகளை வைத்தது பார்க்கும் போது இன்னும் சில வருடங்களில் இந்த தொழில்நுட்பம் முழுவதுமாக பூர்த்தியடைந்து, மனிதர்களைப் போலவே தானாக சிந்திக்கக் கூடிய கட்டத்தில் இந்த தொழில்நுட்பத்தின் செயல்பாடு மனிதர்களின் கட்டுப்பாடை விட்டு கைமீறி போவதற்கு ரொம்ப காலம் ஆகாது என்ற வாதமும் ஒரு பக்கம் எழுப்பப்படுகிறது.
 
    சில சமயங்களில் உண்மை கற்பனையை விடவும், கொடூரமானதாக இருக்கும். அப்படி  பட்ட ஒரு நிகழ்வு தான் சமீபகாலமாக ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப உலகின் மிக அதீத வளர்ச்சி என்று கூட சொல்லலாம். இந்த ARTIFICIAL INTELLIGENCE எதிர்காலத்தில் மனித இனத்துக்கே தீமையானதாக மாறும் என்று உறுதியாக சொல்ல முடியாது. மனிதர்களால் கட்டுப்படுத்தும் அளவுக்கு மட்டும் இதன் வளர்ச்சியை ஏற்படுத்துவதன் மூலமாக பல வழிகளில் இந்த ARTIFICIAL INTELLIGENCE உபயோகமாக இருப்பது சாத்தியமே. ஆனால் இதை எந்த அளவுக்கு நடைமுறை படுத்தமுடியும் என்பதுதான் இங்குள்ள மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.

No comments:

Post a Comment