Friday 7 July 2017

வெடிக்க காத்திருக்கும் மிகப்பெரிய எரிமலை

 
     அமெரிக்காவின் மேற்கு பகுதியில் உள்ள இந்த YELLOW STONE  ல் இந்த எரிமலை அமைந்திருக்குகிறது. சமீப ஆண்டுகளாகவே இந்த எரிமலையின் செயல்பாடுகள் அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அனால் கடந்த வாரத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் இதை பற்றிய பயத்தை அதிகமாகியுள்ளது.  கடந்த ஒரு வாரத்துக்குள்ளாக மட்டுமே சிறியதும் பெரியதுமாக 400 மேற்பட்ட நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது மட்டும் அல்லாமல் YELLOW STONE பகுதியில் இருக்கும் ஏரியில், முன்பு எப்பொழுதும் பதிவு செய்யப்படாத வெப்பநிலை தற்பொழுது பதிவாகியுள்ளது.
 
     பல இடங்களில் நீர் அதிக வெப்பத்தினால் கொதிப்பதை சாதாரணமாகவே பார்க்க முடிந்தது. இந்த நிகழ்வுகள் எல்லாம் பெரும் பரபரப்பை ஏற்படுத்த ஆரம்பித்தது. ஆனால் இந்த YELLOW STONE எரிமலையை பல வருடங்களால் ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகளின் கருத்துப்படி சமீப நாட்களாக அதிக அளவில் நிலநடுக்கங்கள் ஏற்படுவது உண்மை தான் என்றும், ஆனால் இந்த மாதிரியான நிகழ்வுகள் இதுக்கு முன்னப்பும் பல முறை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் எரிமலை வெடிக்க காரணமான LAVA பகுதி இந்த எரிமலையில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதாகவும், ஒரு கட்டத்தில் மோசமான நிலையை அடைந்து கண்டிப்பா வெடிக்கும் என்றும் கூறியுள்ளனர். ஆனால் அந்த நிகழ்வு நடக்க குறைந்த பட்சம் இன்னும் 1000 வருடங்களாவது ஆகும் என்று தெரிவித்துள்ளனர்.
 
    ஆனால் அதுவரைக்கும் நிலநடுக்கம் மாதிரியான நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். ஒரு வேலை இந்த சூப்பர் வேல்கண்னும் வெடித்து சிதறினால் எந்த மாதிரியான விளைவுகள் ஏற்படுத்தும் என்பதை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.
 
    இந்த எரிமலை வெடிக்க ஆரம்பமான கொஞ்ச நேரத்திலேயே, இதை சுற்றியுள்ள பகுதிகளான மான்டோனா, அலடா ஹோப் என்கின்ற பகுதிகள் முற்றிலுமாக அழிந்து விடும். இந்த எரிமலை வெடித்த சில மணி நேரங்களிலேயே, அல்லது சில நாட்களிலேயோ அமெரிக்காவோட மேற்கு பகுதி முற்றிலுமாக அழிந்துவிட வாய்ப்புள்ளது. இது மட்டும் அல்லாமல் 1 மீட்டர் அளவுக்கு தரையில் சாம்பல் படிவத்தற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த எரிமலையில் இருந்து வெளிப்படும் புகையானது பூமியின் வலிமண்டலத்தில் கலக்கும் என்றும், இதனால் பூமியின் பல பகுதிகளில் சூரிய வெளிச்சம் படாமலே போகலாம் என்றும் கூறியுள்ளனர். இது மட்டும் அல்லாமல் இன்னும் பல வழிகளில் அழிவு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
 
    கடைசியாக இந்த YELLOW STONE வெடித்து 70,000 ஆண்டுகள் கடந்து விட்டது. மறுபடியும் இந்த எரிமலை கண்டிப்பாகாக வெடிக்கும். ஆனால் நம்ம கால கட்டத்தில் ஏற்பட வாய்ப்பு இல்லை என்பது ஒரு ஆறுதல் அளிக்கும் விஷயம்.

No comments:

Post a Comment