பொதுவாக நாம் வாசனைக்காக பயன்படுத்தும் திரவியங்கள் எல்லாமே மலர்கள், தாவரங்கள், மரங்கள், சில வகை விலங்குகளிடம் இருந்து கிடைக்கின்றன. கடலில் இருந்தும் வாசனைபொருட்கள் கிடைக்கின்றன என்பது பலருக்கும் தெரியாது.
அந்த பொருளின் பெயர் அம்பர். இது ஒரு வாசனைத் திரவியம். இதன் விலை மிக மிக அதிகம். ஒரு கிலோவே பல லட்சம் விலை போகும். இந்த அம்பர் கடலில் நீருக்கு மேல் மிதக்கும். கடல்நீரும் இதுவும் ஒரே மாதிரியாகதான் இருக்கும். இதை அடையாளம் காண்பது மிகக்கடினம். இதை கண்டுபிடித்து அதை நெருப்பில் சூடாக்கினால் தான் மணம் கமழும் வாசனை வரும்.
இந்த அம்பர் கடலில் எப்படி உருவாகிறது தெரியுமா? திமிங்கிலங்கள் தான் இதை உருவாக்கும் உயிரினம். திமிங்கிலங்கள் மற்ற மீன்களுடன், கணவாய் மீன்களையும் விரும்பி உண்ணும். அப்படி உண்ணும் மீன்களின் கூறிய முட்கள் திமிங்கலத்தின் உணவுப் பாதையை குத்தி விடும். இந்த முள்ளை வெளியே எடுப்பதற்காக திமிங்கலம் வாந்தி எடுக்கும். அப்போது வெளிவரும் திரவமே அம்பராகும்.
இந்த திரவம் தண்ணீரில் கரையாது. இந்த இயற்பியல் பண்பினால் அது கடல் நீரில் மிதக்கிறது. ஆல்கஹாலில் கரையும் தன்மை கொண்டது. ஆல்கஹால் கலந்த வாசனைத் திரவியங்களை மதிப்பூட்டப்பட்ட வாசனை திரவியங்களாக மாற்ற இந்த அம்பர் உதவுகிறது. மிக விலை உயர்ந்த திரவியங்களாக மாற்ற இந்த அம்பர் உதவுகிறது. மிக விலை உயர்ந்த பெர்பியும்களில் அம்பர் சிறிதளவாக கலந்திருப்பார்கள். இதுதான் இயற்கையின் வினோதம்.
No comments:
Post a Comment