Thursday 10 August 2017

பனைமரங்கள் தந்த ஓலை சுவடிகள்


    இன்றைய எழுத்தாளராக இருப்பவர்கள், யாருக்காவது நன்றி சொல்ல வேண்டும் என்றால் நம்முடைய பனை மரங்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். இதன் ஓலைகள் தான் காவியங்களையும், காப்பியங்களையும், அறிய தகவல்களையும் பல தலைமுறைகள கடந்து நம்மிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றன. பனைமரம் தமிழ் நிலத்தின் அடையாளம் என்றாலும். இதன் பூர்விகம் ஆப்பிரிக்கா தான்.

    பனைமரத்தின் ஓலைகள் மூலம் தான் ஓலைச்சுவடிகள் உருவானது. ஓலைச்சுவடி என்பது எழுத்தாணி கொண்டு ஓலையில் எழுதப்படும் ஒரு வகையான நூல் எனலாம். பனை ஓலைகள் தான் எழுதச் சிறந்தவை என்றாலும். எல்லா பனை ஓலைகளும் எழுத பயன்படுவத்தில்லை.

    பனை மரங்களில் நிறைய வகைகள் உண்டு. தாளப்பனை மரம், கூந்தல் பனை மரம், லாந்தர் பனை மரம் போன்ற மரங்களின் ஓலைகலையே ஓலைச்சுவடிகள் செய்ய பயன்படுத்தினார்கள், இதில் கூந்தல்பனை மரத்தின் ஓலைகள் நாலடி நீளமும், நல்ல அகலமும் கொண்டதாக இருக்கு.


     பழுப்பு நிறம் கொண்ட ஓலைகளையே ஓலைச்சுவடிகள் தயாரிக்க பயன்படுத்துவார்கள், ஓலைச் சுவடிகளை நறுக்கி கொண்டு, அவற்றின் நரம்புகளை நீக்குவார்கள். ஒரே அளவில் சீராக ஓலைகளை வெட்டி கொண்டு, நிழலில் காய வைப்பார்கள். பிறகு பனை ஓலைகளை தண்ணீர் அல்லது பாலில் வேக வைப்பார்கள். வேறு ஒரு முறையும் உண்டு, ஓலைமீது நல்லெண்ணெய் பூசி ஊற வைப்பார்கள். இதற்கு “ஓலை வாருதல்” என்று பெயர்.

    பதப்படுத்திய ஓலைசுடிகளை ஒரே அளவில் வெட்டிய பிறகு அவற்றை ஓன்று சேர்த்து இடதுபக்கம் கயிறு கட்டுவதற்காக ஓட்டை போடுவார்கள். அதில் மஞ்சள் தடவிய கயிறாய் கோர்த்து ஏடுகள் விழாமல் கட்டுவார்கள். கயிற்றின் மேல் முனையில் துளையிட்ட செப்புக்காசு அல்லது சொலி வைத்திருப்பார்கள். ஓலைச்சுவடியின் நீளம் அதிகமாக இருந்தால், வலது பக்கமும் ஒரு துளையிட்டு அந்த துளையில் இரும்பினால் ஆனா கம்பியால் சேர்த்துக் கட்டுவார்கள். இதற்கு ‘நாராசம்’ என்று பெயர்.
    ஓலைச்சுவடிகளின் இருபக்கமும் தேக்கு மரத்தால் ஆன பலகையை சேர்த்து கட்டுவார்கள். ஓலைச்சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதுவார்கள். பொதுவாக இது இரும்பினால் செய்யப்பட்டதாக இருக்கும். அரசர்களும் வசதி படைத்தவர்களும் தங்கம், வெள்ளி, தந்தம் போன்றவற்றில் செய்த எழுத்தாணிகளை வைத்திருந்தார்கள்.
    எழுத்தாணி மூலம் எழுதப்பட்ட ஓலைகளில் மஞ்சள், விளக்கு கரி, கோவை இலைச்சாறு, ஊமத்தை இளைச்சாறு போன்றவற்றில் ஏதாவது ஒன்றை பூசுவார்கள். இதனால் சுவடியில் உள்ள எழுத்துக்கள் தெளிவாக தெரியும்.
  ஓலைச்சுவடிகள் மக்கள் கூடும் இடங்களான கோவில்கள், அரண்மனைகள், அருங்காட்சியகங்கள், மடங்கள் ஆகியவற்றில் வைத்து பாதுகாத்தார்கள்.

     இன்று ஒரு புத்தகம் பலபிரதிகள் அச்சடிப்பது போல அன்று மூல ஓலைச்சுவடிகளில் இருந்து அதை பிரதி எடுத்து எழுதுவதற்கென்றே தனியாக  எழுத்தாளர்கள் இருந்தார்கள். அவர்கள் வாழ்ந்த தெருவுக்கு எழுத்துக்கார தெரு என்று பெயர் வைத்தார்கள். இப்படி நகல் எடுப்பவர்கள் சுவடியின் கடைசிவரியின் கீழ் கையெழுத்திட்டு தமது பெயரையும், ஊரையும் தெரிவிப்பார்கள். இவர்களால் தான் ஒரு ஓலைச்சுவடி பல சுவடிகளாக உருவானது. ஓலைச்சுவடிகளை பாதுகாப்பது மூலம் நமது பரமபரித்தையும் பண்பாட்டையும் பாதுகாக்க முடியும்.
 

No comments:

Post a Comment