Wednesday 30 August 2017

இந்தியாவின் Driving Licence எந்ததெந்த நாட்டில் பயன்படும்

 
     வெளி நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் நாம், போக்குவரத்துக்காக யாரையும் சார்ந்து இருக்காமல், நினைத்த இடத்துக்கு சென்று சுற்றி பார்க்கவும், அங்கிருந்து திரும்பவும் வேண்டும் என்றால் Self Driving செய்வது தான் சிறப்பானது. பெரும்பாலான வெளிநாடுகளில் சுற்றுலா பயணிகளுக்கு நான்கு சக்கர வாகனங்கள் வாடகைக்கு விடப்படுகின்றன. எனினும் வெளி நாடுகளில் வாகனங்ககளை இயக்குவதற்கு, அந்நாட்டு ஓட்டுநர் உரிமம் இல்லை என கவலைப்பட வேண்டாம். ஏனென்றால் உலகில் உள்ள சில நாடுகள் இந்தியாவில் வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமம் கொண்டே வாகனங்களை இயக்க அனுமதிக்கின்றனர். அத்தகைய நாடுகள் எவை என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
 
     வலது புறம் Driving System உள்ள அமெரிக்காவில், காலாவதி ஆகாத, ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட இந்திய ஓட்டுநர் உரிமம் வைத்து இருந்தால், நீங்கள் அங்கு சுமார் ஒரு வருடம் காலம் அங்கு வாகனகளை இயக்கலாம். ஜெர்மனியில், செல்லுபடி ஆகக்கூடிய ஒரு இந்திய ஓட்டுநர் உரிமம் வைத்துக் கொண்டு சுமார் 6 மாதம் காலம் வரை வாகனங்களை இயக்க முடியும். ஜெர்மனியிலும் வலது புறம் Driving System தான் அமலில் உள்ளது.
 
    ஆஸ்திரேலியாவில் New South Wals, Queens Land, தெற்கு ஆஸ்திரேலியா, தலைநகர் பகுதிகள் உள்ளிட்டவைகளில், மூன்று மாத காலம் வரை வாகனங்களை இயக்க இந்திய ஓட்டுநர் உரிமம் போதுமானது என்றாலும், அதனுடன் Indernational Driving Permit வைத்திருப்பது அவசியம் ஆகும். ஆஸ்திரேலியாவில் இடதுபுறம் Driving System அமலில் இருந்தாலும், பெரும்பாலான வாகனங்கள் வலதுபுறம் Driving System கொண்டதாகவே உள்ளது. பிரான்ஸ் நாட்டில், செல்லுபடி ஆகக்கூடிய இந்திய ஓட்டுநர் உரிமம் வைத்துக்கொண்டு சுமார் 1 வருட காலம் வரை வாகனங்களை இயக்கலாம். ஆனால் ஓட்டுநர் உரிமம் ஆனது அவசியம் பிரான்ஸ் நாட்டு மொழியில், மொழிபெயர்ப்பு செய்து இருக்க வேண்டும். பிரான்சில் வலதுபுறம் Driving System அமலில் உள்ளது.
 
     தென் ஆப்பிரிக்காவிலும், காலாவதி ஆகாத இந்திய ஓட்டுநர் உரிமம் வைத்துக் கொண்டு வாகனங்கள் இயக்க முடியும் என்றாலும், ஓட்டுநர் உரிமம் ஆனது, கையெழுத்துடன் கூடிய புகைப்படத்துடன் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். தென் ஆப்ரிக்காவில் வாகனங்களை வாடகைக்கு எடுக்க விரும்பினால், கண்டிப்பாக Indernational Driving Permit வைத்து இருக்க வேண்டும். இங்கு இடதுபுறம் Driving System நடைமுறையில் உள்ளது. இங்கிலாந்திலும், செல்லுபடியாகக்கூடிய இந்திய ஓட்டுநர் உரிமம் வைத்துக் கொண்டு வாகனங்களை இயக்க சுமார் 1 வருட காலம் அனுமதிக்கப்படுகிறது. இங்கிலாந்து Driving System மும், இந்தியாவின் Driving System மும் ஒரே மாதிரியானவை என்பதால் அங்கு வாகனங்களை இயக்க இந்தியர்களுக்கு சிரமம் ஏற்படுவதில்லை.
 
     நியூசிலாந்தில் நான்கு சக்கர வாகனம் இயக்க வேண்டும் என்றால் 21 வயது பூர்த்தி அடைந்து இருக்க வேண்டும். மேலும் காலாவதி ஆகாத உங்களுடைய இந்திய ஓட்டுநர் உரிமம் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். இங்கு இடப்புறம் Driving System அமலில் உள்ளது. சுவிட்சர்லாந்தும் இந்திய ஓட்டுநர் உரிமத்தை சுமார் 1 வருட காலம் வரை ஏற்றுக் கொள்கிறது. ஆனால் உரிமம் கண்டிப்பாக ஆங்கிலத்தில் இருக்க வேண்டும். இங்கு வலப்புறம் Driving System கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
 
     மொரிசியஸ் நாட்டில் நான்கு சக்கர வாகனத்தில் பயணிப்பது இனிமையான அனுபவமாக இருக்கும். சிறிய தீவு நாடான மொரீஷியஸில் உள்ள பல்வேறு சுற்றுலா இடங்களை ஒரே நாளில் பார்த்துவிட முடியும். உங்கள் இந்திய ஓட்டுநர் உரிமம் ஆனது, காலாவதி ஆகாமலும் ஆங்கிலத்திலும் இருந்தால், நீங்கள் இங்கு வாகனங்களை எளிதாக வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். மேலும் இங்கு Indernational Driving Permit வைத்து இருப்பது அவசியம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment