Saturday 26 August 2017

வந்துவிட்டது செயற்கை கணையம்

 
     சர்க்கரை நோயாளிகளுக்குச் சந்தோஷமளிக்கும் செய்தியை இரு இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கிறார்கள். யோகிஸ் குட்வா, ஆனந்த பாசு என்ற அந்த இருவர் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். மேயோகிளினிக்கில் பணிபுரியும் அவர்கள், செயற்கைக் கணையத்தை உருவாக்கியிருப்பதாகத் தெரிவித்தனர்.
     இந்தக் கணையம் ஒரு குறிப்பிட்ட நபருக்கு ஏற்றவிதத் துல்லியத்தில், தன்னியக்கமாக இன்சுலினை வெளியிடும். தாங்கள் செயற்கை கணியத்தை உருவாக்கியிருப்பதால், விரைவிலேயே சர்க்கரை நோயாளிகள் ஊசிக் குத்தல்களில் இருந்து விடுபடலாம் என்று கூறுகிறார்கள்.

     செயற்கை கனயத்தை மேலும் மேம்படுத்தும் முயற்சியில் இந்த விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். "குளோஸ்டு லூப் சிஸ்டம்" எனப்படும் இந்த கணையம், ரத்த அளவு கண்காணிப்பு அமைப்பு, தன்னியக்கமாக இன்சுலினை செலுத்தும் அமைப்பு, உடம்புடன் இணைக்கப்பட்டு ஒரு ஜோடி செயல்பாட்டு கண்காணிப்பு அமைப்புகள், "சென்டர்கள் பிராசசிங் யூனிட்" ஆகியவற்றறைக் கொண்டிருக்கிறது. ஒரு சில தன்னார்வலர்களைக் கொண்டு எந்த செயற்கைக் கணியத்தை மருத்துவமனை அளவில் சோதனை செய்யவிருக்கிறார்கள்.

     சோதனையில் ஈடுபடுத்தப்படுவோர் கண்டிப்பான உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, இன்சுலின் செலுத்துதல் ஆகியவற்றுக்கு உட்படுத்தப்படுவார்கள் அப்போது பெறப்படும் தகவல்கள், ஒரு இன்சுலின் வெளியீட்டு அமைப்புக்குச் செலுத்தப்படும். அந்த அமைப்பு, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கண்காணிப்பது, அதற்கேற்பச் செயல்படுவது என்ற உடம்பின் செயல்பாட்டை உணர்ந்துகொள்ளும்.

     சாதரணமாக உடம்பின் செயல்பாட்டுக்கும், குளுகோசில் அதன் தாக்கத்துக்கும் உள்ள தொடர்பைக் கண்டுபிடிப்பது முக்கியம். அதுதான் , தன்னியக்கமாக இன்சுலினை வெளியிடும் கனையத்தை உருவாக்கும் முயற்சியில் பிரதானமாக உதவும் என்று கூறுகிறார் விஞ்ஞானி குட்வா.

No comments:

Post a Comment