Saturday 7 April 2018

தூங்குவதற்கு 9 லட்சம் சம்பளம்



    பள்ளி, கல்லுரி தேர்வு அறைக்கு சென்றால் எப்படி தூக்கம் வருமோ அப்படிதான் சிலருக்கு வேலைக்கு சென்றவுடன் தூக்கம் வரும். சில பன்னாட்டு நிறுவனங்களே சற்று இடைவெளிகளில் ஒய்வு எடுக்க தூங்குவதற்கு அனுமதி தருகின்றனர். ஆனால் நாள் முழுக்க தூங்கினால் யார்தான் சம்பளம் தருவார்கள். ஆம் தருகிறார்கள் சீனாவில் இருக்கும் ஒரு நிறுவனம் தான் தூங்கினால் 9 லட்சம் வரை சம்பளம் தருகிறது.
  சீனாவை சேர்ந்த நாவபாய்ஜின் என்ற பிரபல ஊட்டச்சத்து நிறுவனம்தான் தூங்கினால் 9 லட்சம் சம்பளம் தர தயாராக இருக்கிறது. சீனாவை சேர்ந்த நெட்டீசன்கள் இதை உலகின் ஒரு சொகுசான வேலைக்கு ஒரு அறிய வாய்ப்பு என ஒரு பக்கம் பாராட்டி வருகின்றனர். இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேரும் நபர்கள் இந்த நிறுவனம் தயாரிக்கும் புதிய பொருட்களை சோதிக்க உதவியாக இருக்க வேண்டும். அதாவது இவர்கள் தயாரிக்கும் ஊட்டச்சத்து பொருட்களை உட்கொண்டு அதன் திறனை குறித்து அறிக்கை தர வேண்டும்.
    இப்போது இணையத்தின் வழியாக இந்த வேலை மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. பலரும் இந்த நிறுவனத்தை தேடி படித்து வருகிறார்கள். தூக்கமின்மை என்பது தற்போதைய கவலைகளில் மிகபெரும் கவலையாக மக்கள் மத்தியில் திகழ்ந்து வருகிறது. அதிக படியான வேலை,  மன அழுத்தம், அதிக படியான MOBILE PHONE பயன்படுத்துதல், கணினி உபயோகம் என பல காரணத்தினால் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment