சீனா மிகப்பெரிய கடற்பயணத்தை தொடங்கியது, 14ம் நூற்றாண்டில்தான். 317 கப்பல்கள். அதில் 27 ஆயிரம் ஆட்கள் என்ற பிரமாண்ட கடற்பயணத்தை நாடுகளை கண்டறியும் நோக்கில் தொடங்கினர். ஷாங்ஹே என்பவர் இதன் தலைவர். அவர் ஒரு அரவாணி. கொலம்பஸின் கண்டுபிடிப்புகளுக்கு முன்பே இவர்கள் பல தேசம் போயிருக்கிறார்கள். 28 வருடங்கள், 3௦ தேசங்கள், 3 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தை இவர்கள் கடலில் கடந்திருக்கிறார்கள்.
ஷாங்ஹே இந்தியாவிற்கு வருகை புரிந்தார். அப்போது இந்தியாவில் இருந்த ஒட்டகச்சிவிங்கியை பார்த்து ஆச்சரியப்பட்டார். அதற்கு முன் அப்படியொரு விலங்கை அவர் பார்த்ததேயில்லை. சீனப்புரானங்களில் கியுலின் என்றொரு கற்பனை பாத்திரம் வரும். அது சொர்க்கத்தில் மட்டுமே வாழக்கூடியது. அத்தகையை மிருகத்தை நேரில் கண்ட ஷாங்ஹே உடனே மன்னருக்கு உலக அதிசயம் ஒன்றை கொண்டு வருவதாக தகவல் அளித்தார். மன்னரும் அதை வரவேற்க தயாரானார்.
பல மாத கடல் பயணத்தில் ஒட்டகச்சிவிங்கிகள் சோர்ந்து போயிருந்தன. அவற்றை வாசனை திரவியங்களில் குளிப்பாட்டி மன்னரின் முன்னாள் நிறுத்தினார். மன்னரால் நம்ப முடியவில்லை. இப்படியொரு விளங்கு எப்படி பூமிக்கு வந்தது? அதை கியுலின் என்றே அழைத்தார்.
ஒட்டகச்சிவிங்கி தன் ஆட்சிகாலத்தில் சீனாவுக்கு வந்திருப்பது கடவுளின் ஆசி தான் என்று நினைத்தார். மக்கள் நீண்ட வரிசையில் நின்று வேடிக்கை பார்த்து சென்றனர். தேவலோகத்தில் இருந்து ஒரு உயிரினம் சீனாவுக்கு வந்திருப்பதாக நாடு முழுவதும் சேதி பரவியது. அதை பார்ப்பதற்காக மக்கள் மாட்டுவண்டி கட்டிக்கொண்டு அரண்மனைக்கு வந்தார்கள்.
ஒட்டகச்சிவிங்கி ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்கியது. வானுலகில் இருந்து வந்த மிருகம் என்பதால் இரவில் விழித்திருக்க முடிகிறது என்று நம்பினார் மன்னார். இவற்றறை எப்படி பராமரிப்பது என்று தெரியவில்லை. இதற்காக ஆப்பிரிக்காவில் இருந்து கருப்பு இனத்தை சேர்ந்த அடிமைகளை விலைக்கு வாங்கிவர ஏற்பாடு செய்தார். அவ்வளவு கருப்பான மனிதர்களை அதுவரை சீன கண்டதே இல்லை. சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு வந்த காரணத்தால் அவர்கள் கருப்பாகி விடுகிறார்கள் என்று நம்ப தொடங்கினார்கள்.
ஒட்டகச்சிவிங்கியை கவனிப்பாதற்காக தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். கருப்பு அடிமைகளின் உதவியால் சில ஆண்டுகளில் ஒட்டகச்சிவின்கிகளின் எண்ணிக்கை சீனாவில் கூடியது. மன்னர் தனக்கு நெருக்கமான மன்னர்களுக்கு ஒட்டகச்சிவிங்கியை பரிசளித்தார். பல நூற்றாண்டின் முன்பாக ஒரு ஒட்டகச்சின்கியின் வருகையை சீன அரசும் அதன் மக்களும் எப்படி எதிர்கொண்டார்கள் என்பது ஒரு நாவலுக்கான அடித்தளம் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். இன்றைக்கும் சீனர்களை பொறுத்தவரை ஓட்டடச்சிவிங்கி சொர்க்கத்தில் இருந்து வந்த ஒரு உயிரினம்தான்.
No comments:
Post a Comment