Thursday 12 April 2018

உலகிற்கு ஏற்பட இருக்கும் புதிய நோய்


   கடந்த 2௦15ம் ஆண்டில் இருந்து World Health Organization என்னும் நிறுவனம் Blue Print Priority Disease என்ற ஒரு பட்டியலை வெளியிட்டு வருகின்றனர். இந்த பட்டியலில் மனிதர்களுக்கு மிக ஆபத்தகாக பார்க்கப்படும் நோய்களை வரிசை படுத்தியுள்ளனர். World Health Organization இந்த பட்டியலை வெளியிட ஒரு முக்கிய காரணம் என்னவென்றால் 2௦14 ம் ஆண்டு ஏற்பட்ட Ebola Outbreak என்னும் ஒரு கொடிய நோய்தான்.

   Ebola Outbreak என்னும் நோய் முதல் முதலில் ஆப்ரிக்கா நாடுகளில் தான் பரவத்தொடங்கியது. இந்த நோய் பற்றி விழிப்புணர்வு இல்லாததால் இந்த நோய் தாக்கி கிட்டத்தட்ட 29,000 பேர் பாதிக்கப்பட்டும். மேலும் 11,000 க்கும் அதிகமானோர் மரணம் அடைந்தனர். இப்படி ஒரு நிலை எதிர்காலத்தில் தவிர்க்க வேண்டும் என்பதற்காக தான் World Health Organization இந்த பட்டியலை உலக நாடுகளுக்கு வெளியிட்டு வருகின்றனர்.

   இந்த பட்டியலை பொறுத்து, உலக நாடுகள் அந்த அந்த நோய்களின் தீவிர தன்மை அறிந்து கொண்டு அதற்கு தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள இந்த பட்டியல் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்று World Health Organization கருதுகின்றது. இது மட்டும் அல்லாமல் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த பட்டியலில் இருக்கும் எல்லா நோய்களுக்கும் சரியான தடுப்பு மருந்து இன்னும் கண்டுபுடிக்க முடியவில்லை. Ebola போன்ற நோய்களின் வீரியத்தை கட்டுபடுத்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டதே தவிர, பூரணமாக குணமடைய இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை, மேலும் அடுத்த கட்ட ஆராச்சியை முன்னிறுத்தி இந்த பட்டியலை வெளியிட்டு வருகின்றனர்.

   World Health Organization வெளியிடும் இந்த பட்டியலில் என்ன என்ன நோய்கள் உள்ளது என்றால். பன்றி காய்ச்சல், எபோல, சிகா வைரஸ், சார்ஸ், லசா காய்ச்சல் போன்ற நோய்களை தான் வகைபடுத்தி இருந்தனர் போன வருடம் வரைக்கும். ஆனால் சமீபத்தில் வெளியிட்ட பட்டியலில் Disease X என்ற புதிய நோய் பரவலாம் என்று World Health Organization எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

   மேலும் இந்த Disease X மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இன்னும் சரியாக சொல்ல வேண்டும் என்றால் சில நூற்றாண்டுகளுக்கு முன்னாள் அம்மை, காலரா போன்ற நோய்கள் எந்த அளவுக்கான பாதிப்பை ஏற்படுத்தியதோ, அதே அளவுக்கான பாதிப்பை இந்த Disease X ம் ஏற்படுத்தும் என்று கூறியுள்ளனர்.
இந்த Disease X எப்படி உருவாகியது, இது எப்படி பரவும் என்றும் கூட இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனென்றால் இந்த Disease X க்கு காரணமான நுண்ணுயுரிகளை இதுவரைக்கும், எந்தவொரு ஆராச்சியாளரும் பார்த்திராத நுண்ணுயிரி என்று அறிவித்துள்ளனர்.

   இந்த நோய் எப்படி உவுவாகும் என்றால். ஏற்கனவே இருக்கும் நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளில் ஏற்பட்ட Genetic notation காரணமாகவோ, அல்லது தற்செயலின் காரணமாகவோ இந்த நோய் உருவாக்கி இருக்கலாம் என்று கூறுகின்றனர். இந்த நோய் தாக்கப்பட்ட பின்விளைவின் காரணமாக வேறு சில கொடிய நோய்கள் ஏற்பட அதிகபட்ச வாய்ப்பு இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நோய் மனிதர்களிடம் இருந்து பரவுமா அல்லது விலங்குகளிடம் இருந்து பரவுமா என்றும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

   இந்த Disease X என்னும் நோய் உலகில் எதாவது ஒரு மூலையில் பரவ தொடங்கியது என்றால் அதன் விளைவுகள் நினைத்து பார்க்கமுடியாத படி இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment