கலாச்சாரத்திலும் சரி, அறிவியலிலும் சரி,
மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து, திடீர் என்று உயர்வினை அடைந்து மேம்பட்ட
சமுகமாக மாறிய நாகரிகம் ஒன்றே எகிப்தியர்கள் என்று கூறலாம். தொழில்நுட்ப அறிவில்
குறைந்திருந்த இவர்கள் சட்டென்று அதில் உயர்வை அடைந்ததற்கு காரணம் தமிழர்கள் தான்
என்ற ஒரு கருத்தை ஆய்வாளர்கள் ஆதாரத்துடன் முன் வைக்கின்றனர்.
எகிப்திய நாகரிகத்தின் மத்தியில் வேற்றுசமுகம்
ஓன்று குடியேறிய காரணத்தினாலேயே அவர்களுக்கு இப்படி ஒரு அறிவு கிடைத்தது என்றும் அது
குமரி கண்டம் எனப்படும் லொமுரியா கண்டத்தில் இருந்து வந்த தமிழர்கள் தான் என்று வரலாற்று
ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனை மேலும் உறுதிபடுத்துகின்றார் அலெக்ஸாண்டர் என்ற கெந்தர்
தேவ் என்னும் தொல்பொருள் ஆய்வாளர்.
அவரின் கூற்றின்படி எகிப்தியர்கள் வாழ்ந்து வந்த
காலத்தில் தென்பகுதியில் இருந்து வேறுஒரு சமுகம் அங்கு வந்து குடியேறியுள்ளது.
அந்த சமுகம் குமரி கண்டமாக தமிழர் வரலாறு குறிப்பிடும் லொமுரியாவில் இருந்து வந்த
சமுகம் என்றும் கெந்தர் தேவ் குறிபிட்டுள்ளார். அதேபோன்று எகிப்த்துக்கும், இந்தியாவிற்கும்
கடல்வழி வியாபாரம் நடைபெற்றுள்ளதாக ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எகிப்தியர்களும் தமிழர்களுக்கும்
தொடர்பு உண்டு என்பது நிருபிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் அல்லாது கி.மு.6௦௦௦
ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழர்கள் எகிப்தில் வாழ்ந்துள்ளார்கள். 1927-ம் வருடம் எகிப்தில் தோண்டி எடுக்கப்பட்ட மண்டை
ஓடுகள் தமிழர்களின் கலாச்சாரத்துடன் ஒத்துபோவதாக அங்குள்ள வரலாற்று ஆய்வாளர்கள்
கூறுகின்றனர்.
மேலும் நைல் நதி கரையில் வாழ்ந்த
செர்சியர்கள் என்னும் மக்கள் தமிழர் மரபில் வந்தார்கள் என ஓக்ரான் என்ற தொல்பொருள்
ஆய்வாளர் குறிபிட்டுள்ளார். நைல்நதி என்பது நீலநதி எனப்படும் தமிழ் வார்த்தையில் இருந்து
திரிவுபடுத்தப்பட்டு வந்தது என்று கூறபடுகிறது. இறந்தவர்களை எரிப்பதும், புதைபடும்,
ஒருவகையில் தமிழர் மரபுதான் அப்படிப்பட்ட வழக்கமுறையில் உருவாகபட்டதே எகிப்த்திய
மன்னர்களுக்காக உருவாக்கப்பட்ட பிரமிடுகள் எனவும் கூறபடுகிறது.
இங்கு பெரிய அளவில் அடக்கம் செய்யப்படும் சமாதியை
பெரும் இடு என்று அழைக்கப்பட்டு காலபோக்கில் ப்ரமிடாக மாறிப்போனதாக ஒருசிலர்
கூறுகின்றனர். அதே போன்று எட்வர்ட் போகொகி என்ற வரலாற்று ஆய்வாளர். இந்தியன் இன்
கிரீஸ் என்ற நூலின் உள்ளே சிந்துவெளி மக்களும் எகிப்தில் வாழ்ந்த மக்களும் ஒரே இனத்தை
சேர்ந்த மக்கள் எனவும், சிந்துவெளியில் இருந்து பிரேசில் வளைகுடாவை கடந்து ஏமம்
கடற்கரை வழியாக எகிப்து, நபியா, அபிசேனியா போன்ற பகுதிகளுக்கு பரவிசென்றுள்ளனர்
என்று குறிபிட்டுள்ளார். மேலும் ஹென்றிச் ஹரிப்ளுக் என்பவர் தன்னுடைய ஹிஸ்டரி ஆப்
எகிப்த் என்ற நூலில் தமிழர்கள் 8000 ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தில் குடியேறி தமது கலாச்சாரம்,
கலை மற்றும் தொழில்நுட்ப அறிவினை அங்கு நிலைநாட்டினர் என்று கூறியுள்ளார்.
பாண்டிய நாட்டு தமிழர்கள் எகிப்து நாட்டில்
பரவியதோடு எகிப்திய நாகரிகத்தை உருவாக்கினர் என்று அடல்ப் எற்க்மன் என்ற ஆய்வாளர் தனது
லைப் இன் என்சியன்ட் எகிப்த் என்ற நூலில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment