Sunday 22 April 2018

தண்ணீரை குடித்து கல்லாக மாறும் பறவைகள்


   இந்த உலகத்தில் ஒவ்வொரு நாளும் மனிதர்களுக்கு தெரியாத எதாவது ஒரு புதிய விஷயம் கண்டுபிடிகப்படுக்கிறது. சில சமயங்களில் ஆச்சரியப்படுத்தும் விதத்திலும் மற்ற சமயங்களிலும் அதற்கு நேர் மாறாக அமையவும் வாய்ப்பு உள்ளது. அப்படி 2010-ம் ஆண்டு புகழ்பெற்ற புகைப்பட கலைஞரான NICK PRANT-ஆல் ஒரு அதிசய ஏரி கண்டுபிடிக்கப்பட்டது.

   புகழ்பெற்ற WILD LIFE புகைப்படக் கலைஞரான NICK PRANT 2010-ம் ஆண்டு தான்சானியா நாட்டு வடக்கு பகுதியில் ஒரு உப்பு நீர் ஏரியை கண்டுள்ளார். இந்த உப்பு நீர் ஏரியில் ஒரு வினோதமான நிகழ்வு நடந்துகொண்டிருகிறது. இந்த ஏரியில் தண்ணீர் குடிக்க வரும் பறவைகள் கற்சிலைகளாக மாறிவிடுகின்றன. இதை பார்த்து ஆச்சரியம் அடைந்த NICK PRANT இந்த ஏரியின் நீரை குடித்து கற்சிலைகளாக மாறும் பல பறவைகளையும் புகைப்படம் எடுத்து இருக்கிறார்.

   இந்த புகைப்படங்கள் NICK PRANT க்கு 2012-ம் ஆண்டுக்கான சிறந்த WILD LIFE PHOTOGRAPHAR விருது கிடைத்துள்ளது. இந்த ஏரியில் மட்டும் எப்படி கற்சிலைகளாக மாறுகிறது என்கிற ரகசியத்தை தெரிந்து கொள்ள ஆராச்சியாளர்கள் அந்த ஏரியின் தண்ணீரை எடுத்து ஆய்வு செய்தனர். அப்படி ஆய்வு செய்ததில்  கால்சியம் கார்பனேட், நைட்ரோ கார்பன், மற்றும் பலவகையான வேதிபோருள்கள் கலந்திருப்பதை கண்டுபிடித்தார்கள்.

   இந்த தண்ணீரின் PH அளவு 10.5, இந்த அளவுக்கு அதிக PH கொண்ட தண்ணீரை, இந்த தண்ணீரை குடிக்கும் அளவுக்கு மாற்றம் அடைந்த உரினங்ககள் தவிர மற்ற உயிரினங்கள் கண்டிப்பாக குடிக்க முடியாது. இப்படி இருக்கும் போது இந்த எரியின் தன்மை தெரியாமல் பல பறவைகள் இந்த ஏரியின் தண்ணீரை குடிக்கும் போது இதில் இருக்கும் உப்பு தன்மையால் உடனடியாக இறந்து போகிறது.

   நாளடைவில் கால்சியம் கார்பனேட்-ஆல் கொஞ்சம் கொஞ்சமாக கற்சிலைகள் மாதிரியான தோற்றத்திற்கு மாறிவிடுகின்றன. இந்த ஏரியின் தண்ணீரின் தன்மையை பற்றி தெரிந்து கொண்ட சில பறவை இனங்கள் இந்த பகுதிக்கு வருவதை தவிர்த்து விட்டன. ஆனாலும் சில பறவை இனங்கள் குறிப்பாக FLEMINGO போன்ற பறவை இனங்கள் இப்போவும் தெரியாமல் இந்த ஏரியின் தண்ணீரை குடித்து இறந்து விடுகின்றன.

No comments:

Post a Comment