Monday 23 April 2018

உள்ளங்கை அரித்தால் பணம் வராது, வியாதி தான் வரும்



    நம் உடலின் தோலை ஒரு 'ஷோ-கேஸ்' என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள். ஒரு கடையில் என்னென்ன பொருள் இருக்கிறது என்பதை கடையின் 'ஷோ-கேஸ்'சில் அடுக்கி வைத்திருப்பார்கள். அதை வைத்தே அது என்ன வகையான கடை என்பதை தெரிந்து கொள்ளலாம்.


    அதேபோல் நமது உடலில் என்னென்ன வியாதி இருக்கிறது என்பதை ஒருவரின் தோலை பார்த்தே கண்டுபிடித்து விடலாம். அதனால் தான் தோலை 'ஷோ-கேஸ்' என்கிறார்கள். உள்ளங்கை அரித்தால் பணம் வரும் என்று பலரும் சொல்வார்கள்.

    ஆனால் தொடர்ந்து உள்ளங்கை அரித்தபடி இருந்து லேசாக தோலும் தடித்திருந்தால் அது அபாய அறிவிப்பு. பெருங்குடலில் பதிப்பு இருந்தால் தான் உள்ளனகையில் அரிப்பாகவும் தடிப்பாகவும் பிரதிபலிக்கும். உடனே டாக்டரை பார்த்து சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.

    அழகான பெண்களை மெழுகால் செய்து வைத்த சிலை என்று சொல்கிறார்கள். மருத்துவ ரீதியாக மெழுகு போன்ற தோல் ஆபத்தானது. ஒருவருக்கு தோல் மெழுகு போல இருந்தால் அது இதய நோய்க்கான அறிகுறி!

    ஒருவருக்கு மாரடைப்பு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு 'நிலைமை மோசம்! அம்புலன்சுக்கு போன் செய்யுங்கள்' என்று அபயக்குரல் கொடுப்பது கூட தோல்தான். ஆம்! மாரடைப்பு வரும் போது போட்டிருக்கும் சட்டையே தொப்பலாக நனைந்து விடும் அளவுக்கு வியர்க்க வைப்பது தோல்தான்.

    இதேபோல் கல்லிரலில் இருக்கும் 'பைல்' என்ற பித்தப்பை கல்லீரல் கெடும்போது அதில் இருக்கும் பித்தநீர் ரத்தத்தோடு கலந்து விடும். ரத்தத்தில் பித்த நீர் கலக்கும் பொது தோல் மஞ்சள் நிறத்துக்கு மாறி விடுகிறது. அதுதான் மஞ்சள் காமாலை.

    சிலருக்கு ரத்தத்தில் இரும்புச்சத்து குறைந்து போகும். இதை கண்டுபிடுக்காமல் விட்டால்... இதயம், மூளை, பேச்சு என்று எல்லாமே பாதித்து விடும். உடலில் ரத்தச் சோகை உள்ளதை தோல்தான் முதலில் வெளியில் தெரிவிக்கும். தோல் பளபளப்பை இழந்து வெளுத்துப் போவதுதான் ரத்தச் சோகை.

    ஆண், பெண் யாராக இருந்தாலும் சிலருக்கு சிறுநீர் துவாரத்தில் அடிக்கடி சாம்பல் பூத்துவிடும்! இன்னும் சிலருக்கு அதில் சின்ன சின்ன வெடிப்புகள் கூட இருக்கும். இம்மாதிரி பிரச்சினைகளுடன் சேர்ந்து காரணமே இல்லாமல் உடம்பில் அரிப்பு எடுக்கும். மழைகாலங்களில் கூட வேனல் கட்டி வரும். இதெல்லாம் சர்க்கரை வியாதிக்கான முதல் அறிகுறி. இதை ஆரம்பத்திலே கவனித்து முறையான சிகிச்சை எடுத்து கொள்வது நல்லது. நோயை முற்றவிட்டு பிறகு அவஸ்தைப்பட வேண்டியது இல்லை. தோலை உன்னிப்பாக கவனித்து வந்தாலே பல நோய்களை முன்கூட்டியே தெரிந்து, பெரிய பாதிப்பில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment