Tuesday, 24 April 2018

காமராஜரும் ஊழல் செய்தார்



   பெருந்தலைவர் காமராஜரும் ஊழல் செய்தார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம் உண்மை தான் காமராஜரும் ஊழல் செய்தார்.

   ஒரு முறை திரையரங்கு உரிமையாளர் ஒருவர், பெருந்தலைவர் காமராஜரை நேரில் சந்தித்து தான் புதிதாக கட்டிய திரையரங்குக்கு உரிமம் கேட்டு வந்துள்ளார். இவரிடம் தான் காமராஜர் ஒரு டீல் வைக்கிறார். முனைஞ்சி பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தான் அந்த திரையரங்கு உரிமையாளர்.

    இவருக்கு ரத்னா மற்றும் பார்வதி என்ற இரண்டு திரையரங்கு உள்ளது. அதை கட்டி முடித்து விட்டுதான் அனுமதி பெற அப்பொழுது முதல்வராக இருந்த காமராஜரை சந்தித்து உரிமம் கோரினார். ஆனால் காமராஜரோ உடனடியாக அனுமதி கொடுக்கவில்லை.

   உங்கள் திரையரங்குக்கு உரிமம் கொடுக்க வேண்டும் என்றால் நீங்கள் இரண்டு பள்ளிகூடங்கள் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதனால் முதல்வரின் கோரிக்கையை மறுக்க முடியாத திரையரங்கு உரிமையாளர். கோரிக்கையை ஏற்று முனைஞ்சி பட்டியில் ஒரு பள்ளிக்கூடமும், நான்கு நெறியில் ஒரு பள்ளிக்கூடமும் கட்டி முடித்துவிட்டு பெருந்தலைவர் காமராஜரை நேரில் சந்தித்து திரையரங்குக்கு உரிமம் பெற்றார்.

    திரையரங்குக்கு உரிமம் கொடுத்ததோடு மட்டும் அல்லாமல், அந்த இரண்டு பள்ளிகளையும் நேரில் சென்று திறந்து வைத்தார். இந்த பள்ளிகளில் இன்று 2௦௦௦ க்கும் மேற்பட்ட ஏழை மாணவ மாணவிகள் படித்து பயனடைகின்றனர்.

    இன்று ஒரு கட்டிடத்துக்கு இவ்வளவு லஞ்சம் வேண்டும் என்று லஞ்சத்தை கேட்டு பெரும் ஊழல் ஆட்சியாளர்கள் மத்தியில், பணக்காரர்களிடம் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி, நாட்டு மக்களுக்காக கல்விக்கூடங்கள் கட்ட வைத்த பெருந்தலைவர் காமராஜர் போன்ற வித்தியாசமான ஊழல்வாதிகள் நம் நாட்டுக்கு அவசியம் தேவைதான்.

No comments:

Post a Comment